பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 212

                      65
காய்பதங்கண் டருங்கொல்லன் கரும்பொன் காப்பா
னோய்பதங்கண் டாற்றானோ நுனித்த வன்பின்
றாய்பதங்கண் டெந்தையெனச் சாற்றும் வேலை
சேய்கதங்கண் டீண்டொருவன் றூது சென்றான்.
 

''காய் பதம் கண்டு அருங் கொல்லன் கரும் பொன் காப்பான்
நோய் பதம் கண்டு ஆற்றானோ, நுனித்த அன்பின்
தாய் பதம் கண்ட எந்தை?'' எனச் சாற்றும் வேலை,
சேய் பதம் கண்டு ஈண்டு ஒருவன் தூது சென்றான்.


     
''அரிய கொல்லன் இரும்பு பழுக்கக் காய்ந்த பக்குவம் கண்டு
அதனை எடுத்துக் காப்பான். நுணுக்கமான அன்பில் தாயின் இயல்பு
கொண்ட எம் தந்தையாகிய இறைவன் தந்த துன்பத்தைத் தக்க பருவம்
கண்டு ஆற்ற மாட்டானோ?'' என்று தொபீயன் சொல்லிக்
கொண்டிருந்தபோதே, வழியில் வந்த மகனின் தன்மை கண்டு ஒருவன்
இங்கே தூது உரைக்க வந்தான்.

     'சென்றான்' என்பது 'வந்தான்' என்னும் பொருளில் நின்றது.
பிறிவிடத்தும் இவ்வாறு வருதல் காண்க. 'கண்டெந்தை' தொகுத்தல் விகாரம்.

          வானவன் இரபயேல் வகுத்த கொடைப்பயன்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா.

 
         66
திங்கணா ணரிவை யோடு
     சென்றனன் காளை யென்றாற்
கெங்கணா னம்பி யென்றா
     ரெழும்விரை விவருஞ் சென்றே
யிங்கணா மடிக ளென்ன
     விருவர்தா டழுவி வீழ்ந்து
தங்கணான் மலர்நீ ராட்டித்
     தகுந்துய ராற்றி னாரே.