''திங்கள் நாண்
அரிவையோடு சென்றனன் காளை'' என்றாற்கு,
''எங்கணான் நம்பி?'' என்றார் எழும் விரைவு இவரும் சென்றே,
''இங்கண் ஆம், அடிகள்!'' என்ன இருவர் தான் தழுவி வீழ்ந்து,
தம் கணால் மலர் நீர் ஆட்டித் தகும் துயர் ஆற்றினாரே. |
தூதுவன்,
''திங்களும் நாணி மறையத் தக்க ஒரு பெண்ணோடு காளை
போன்ற தயோதரன் வந்துள்ளான்'' என்றான். என்ற அவனை நோக்கி,
''சிறந்த மகன் எவ்விடத்து உள்ளான்'' என்று பெற்றோர் வினவினர்.
அவர்கள் அவ்வாறு வினவி எழும் விரைவிற்கு ஏற்றவாறு தயோதரனோடு
வந்த இவர்களும் விரைந்து சென்று சேர்ந்தனர். ''அடிகளே, நான் இருப்பது
இவ்விடத்தே ஆம்!'' என்று தயோதரன் அவ்விருவர் கால்களையும் தழுவி
வீழ்ந்தான். அப்பெற்றோர் மலர் போன்ற தம் கண்களின் நீரால் அவனைக்
குளிப்பாட்டித் தகுந்த துயரத்தை ஆற்றிக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு
ஏற்பச் சொல்லும் செயலும் விரைந்து செறிய இப் பாடல்
அமைந்த திறம் போற்றத் தக்கது. 'கணான் மலர்' என்பதனை 'மலர்க்
கணான்' என மாற்றிக் கூட்டுக. நெடு நாட் பிரிந்த மகனைப் பற்றியதாதலின்,
'தகுந்துயர்' எனப்பட்டது.
| 67 |
ஏற்றினா
னுயிரோ டாக்கை
யிமிழ்த்தென
வணைத்தான் கண்ணீர்
தூற்றினா னழுங்க ணன்றித்
துலங்குகண்
ணிலெனோ வென்னச்
சாற்றினா னரிய தோழற்
றழுவினா
னவனு மிந்நோ
யாற்றிநா னுவப்பச் செய்வே
னரிகவிக்
கவலை யென்றான். |
|