ஏற்றினான்;
உயிரோடு ஆக்கை இமிழ்த்து என அணைத்தான்; கண்ணீர்
தூற்றினான்; ''அழும் கண் அன்றி, துலங்கு கண் இலெனோ?'' என்னச்
சாற்றினான்; அரிய தோழன் தழுவினான். அவனும், ''இந் நோய்
ஆற்றி நான் உவப்பச் செய்வேன்; அரிக இக் கவலை'' என்றான். |
தொபீயன்
தன் மகனைத் தூக்கினான்; உயிரோடு உடலைப் பிணித்த
தன்மையாக அவனை அணைத்தான்; மகிழ்ச்சிக் கண்ணீர் சொரிந்தான்.
''அழும் கண்ணேயன்றி, மகனைக் காணத் துலங்கிய கண் இல்லாதவன்
ஆனேனோ?'' என்று சொன்னான். துணை சென்ற அரிய தோழனையும்
தழுவினான். அத்தோழனும், ''இக் கவலையை விடுக. நான் இந்நோயையும்
ஆற்றி மகிழச் செய்வேன்'' என்றான்.
தோழன்
+ தழுவினான் என்ற தொடர், 'தோழனைத் தழுவினான்
என்ற இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருளில், 'தோழறறழுவினான்'
என வந்தது.
| 68 |
நூல்வழி கொணர்ந்த
பித்து
நோமிரு
கண்ணிற் பூசிச்
சேல்வழி சிலாம்பிற் பில்லஞ்
சிந்திவீழ்ந்
திருளு நீங்க
நால்வழி யனைத்துந் தோன்றி
நவையறத்
தொபீயன் காண
மேல்வழி யுதவி யென்ன
விமலன்பின்
னிவனைத் தாழ்ந்தான். |
| |
நூல் வழி கொணர்ந்த
பித்து நோம் இரு கண்ணில் பூசி,
சேல் வழி சிலாம்பின் பில்லம் சிந்தி வீழ்ந்து இருளும் நீங்க,
நால் வழி அனைத்தும் தோன்றி நவை அறத் தொபீயன் காண,
மேல் வழி உதவி என்ன விமலன் பின் இவனைத் தாழ்ந்தான். |
அசரீயன்
கொண்டு வந்திருந்த மீன் பித்தத்தை மருத்துவ நூல்
முறைப்படி நோவுற்றிருந்த இரு கண்களிலும் பூசினான். பூசவே,
மீனிடத்துள்ள செதில்கள் போல்க் கண்களிலிருந்து படல்கள் சிந்தி விழுந்து
|