பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 215

மாசு நீங்க, நாலு பக்கமுமுள்ள எல்லாம் புலப்படத் தோன்றிக் குற்றமறத்
தொபீயன் கண்டான். கண்டு, அது மேலுலகிலிருந்து கிடைத்த உதவி என்று
தெளிந்து, இறைவனைத் தொழுத பின் இவனையும் தொழுதான்.

 
                  69
திருமணிக் குன்றின் சாயற்
     சிறுவனு மொளிமீன் பூத்து
வருமணிச் சாய லாளும்
     வளர்நிதிக் குப்பை யோடு
பெருமணிப் பேழைச் சால்பும்
     பெற்றமற் றெவையுந் தன்கண்
ணிருமணிக் களிப்பிற் கண்டா
     னிருங்கொடைப் பயனின் மிக்கான்.
 
திரு மணிக் குன்றின் சாயல் சிறுவனும், ஒளி மீன் பூத்து
வரும் மணிச் சாயலாளும், வளர் நிதிக் குப்பையோடு
பெரு மணிப் பேழைச் சால்பும், பெற்ற மற்று எவையும் தன்கண்
இடு மணிக் களிப்பின் கண்டான் இருங் கொடைப் பயனின் மிக்கான்.

     பெருங் கொடையினால் அடையும் திருவருட் பயனில் சிறந்தவனாகிய
தொபீயன் அழகிய மாணிக்கக் குன்றின் தோற்றமுள்ள சிறுவன்
தயோதரனையும், ஒளியுள்ள விண்மீன்கள் பூத்து வரும் மாணிக்கச் சாயல்
கொண்ட சார்மியையும், மிகுதியான செல்வக் குவியலோடு பெரிய மணிகளும்
கொண்ட பெட்டகத்தின் மேன்மையையும், மணப் பரிசாகப் பெற்று வந்த
மற்ற எல்லாவற்றையும் தன் கண்ணின் இரு மணிகளாலும் மகிழ்ச்சியோடு
கண்டான்.

 
          70
நல்வினை விளைவு கண்ட
     நகரெலா நயப்பத் தோன்றல்
பல்வினை வழியி லாய
     பயனெலாம் பணிப்பத் தாதை
வில்வினை வளைக்கை பற்றி
     வேறிருந் துரைமோ காளாய்
வல்வினை யுணர்விற் றோழன்
     வழங்குகைம் மாறே தென்றான்.