நல் வினை விளைவு
கண்ட நகர் எலாம் நயப்ப, தோன்றல்
பல் வினை வழியில் ஆய பயன் எலாம் பணிப்ப, தாதை
வில் வினை வளைக் கை பற்றி வேறு இருந்து, ''உரைமோ, காளாய்,
வல் வினை உணர்வின் தோழன் வழங்கு கைம்மாறு ஏது?'' என்றான். |
தொபீயன்
செய்த நல்வினையின் விளைவுகளைக் கண்ட நகர
மக்களெல்லாம் மகிழ்ந்தனர். மகன் தயோதரன் வழியில் நிகழந்த பல
செயல்களாலும் விளைந்த பயனெல்லாம் எடுத்துச் சொன்னான். தந்தை, ஒளி
செய்கின்ற கடகம் அணிந்த மகன் கையைப் பிடித்துத் தனியிடத்து இருந்து,
''காளை போன்ற மகனே, சொல்வாய்! அரிய செயல்களை அறிவோடு
முடித்துத் தந்த அத்தோழனுக்கு வழங்கத் தக்க பதில் உதவி யாது?''
என்றான்.
உரைமோ
- 'மோ' முன்னிலை அசை.
| 71 |
கொடியவோர்
வகுலி கொன்றான்
கொள்கடன்
கொண்டான் பேய்கள்
கடியவோர் கவினல் லாளைக்
கடியொடு
சேர்த்தான் செல்வம்
பொடியவோ ரளவற் றுய்த்தான்
புலம்புனக்
கிருகண் டந்தான்
படியவோர் கைம்மா றோசீர்
பாதியிட்
டிறைஞ்ச வென்றான். |
| |
|
''கொடிய ஓர்
வகுலி கொன்றான்; கொள் கடன் கொண்டான்; பேய்கள்
கடிய ஓர் கவின் நல்லாளைக் கடியொடு சேர்த்தான்; செல்வம்
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான்; புலம்பு உனக்கு இரு கண்
தந்தான்.
படிய ஓர் கைம்மாறோ சீர் பாதி இட்டு இறைஞ்ச'' என்றான்
|
தயோதரன்
மறுமொழியாக, ''அசரீயன் என்னைக் கொல்ல வந்த ஒரு
கொடிய மீனைக் கொன்றான்; உன்னிடம் ஒருவன் கொண்ட கடனை மீட்டுக்
கொண்டான்; பேய்களை விலக்கி அழகிய ஒரு பெண்ணைத் திருமணத்தின்
மூலம் என்னோடு சேர்த்து வைத்தான்; செல்வம் முளைத்து வளருமாறு ஓர்
|