''உருக் கொடு
தோன்றி, நானே உரு இலா வானோன், இன்பப்
பெருக் கொடு தேவ பாதம் பெற்ற இரபயேல் என்பேன்.
மருக் கொடு மலர்ந்த பூப் போல், வளர் அருள் கொடையின் பாலால்,
திருக் கொடு புகழ் நீ எய்தச் செலுத்தினான் என்னை நாதன். |
''உருவங்
கொண்டு இங்கே தோன்றியிருப்பினும், நான் உருவமில்லாத
வானவன். இன்பப் பெருக்கோடு இறைவன் திருவடியை அணுகி நிற்கும்
பேறு பெற்ற இரபயேல் எனப்படுவேன். நீ கருணையோடு வளர்க்கும்
கொடையின் பயனாக, மணம் கொண்டு மலர்ந்த பூவைப் போல், நீ
செல்வமும் பெருகக் கொண்டு புகழும் அடையுமாறு ஆண்டவனே என்னை
அனுப்பி வைத்தான்.
என்பேன்
- எனப்படுவேன்.
| 75 |
இரவலர் தங்கை
வேலி
யிடத்தரும்
பொருளை வித்திப்
புரவலர் புகழும் பொய்யாப்
பொலிவொடு
விளைத்தி வாழ்வும்
பரவலர் மலர்ந்த சோலை
படர்நிழன்
மங்கா யாண்டுங்
கரவலர் முகத்தில் லோர்தங்
கைக்கொளுங்
கொடைவித் தெஞ்சா. |
| |
''இரவலர் தம்
கை வேலியிடத்து அரும் பொருளை வித்தி,
புலவலர் புகழும் பொய்யாப் பொலிவொடு விளைத்தி வாழ்வும்,
பரவு அலர் மலர்ந்த சோலை படர் நிழல் மங்கா; யாண்டும்
கரவு அலர் முகத்து இல்லோர் தம் கைக் கொளும் கொடை
வித்து
எஞ்சா. |
''இரப்பவர்தம்
கையாகிய வயலில் அரிய பொருளாகிய விதையை
விதைத்து, கொடுப்பவர்க்கு உரிய புகழையும் நல் வாழ்வையும் தவறாத
சிறப்போடு விளைவித்துக் கொண்டாய். பரவலாகப் பூக்கள் மலர்ந்த செழித்த
சோலையில் படர்ந்துள்ள நிழல் மங்குவதில்லை. எப்பொழுதும் தம்மிடம்
உள்ளதை மறைத்தல் இல்லாதவர்முன் சென்று பொருள் இல்லாதவர் தம்
கையில் பெற்றுக் கொள்ளும் கொடையாகிய வித்து குறைபடுவதில்லை.
|