|
வேலி
- வேலி அளவுள்ள வயலுக்கு ஆகுபெயர். சோலை நிழலில்
ஆயிரம் பேர் தங்கிப் பயன் பெற்றும் நிழலுக்கு எக்குறையும் ஏற்படாமை
போல், கொடையினால் பலர் பயன் பெற்றும் கொடுத்தார்க்குக் குறை
ஏற்படுவதில்லை என்பது கருத்து.
| 76 |
பொன்னொளி
சுடரச் செய்தீப்
புரையறத்
துயர்ந்தா யென்ன
வுன்னொளி சுடரத் துன்பத்
துளைதியே
துன்பந் தாங்கி
மன்னொளி சுடர நெஞ்சின்
மயக்கிலா
பொலிந்தா யென்னப்
பின்னொளி சுடர வீச்சீர்
பெற்றியே
கொடையின் மிக்கோய். |
| |
''பொன் ஒளி
சுடரச் செய் தீப் புரை, அறத்து உயர்ந்தாய் என்ன
உன் ஒளி சுடர, துன்பத்து உளைதியே துன்பம் தாங்கி
மன் ஒளி சுடர நெஞ்சின் மயக்கு இலா பொலிந்தாய் என்ன,
பின் ஒளி சுடர இச்சீர் பெற்றியே, கொடையின் மிக்கோய்! |
''கொடையிற்
சிறந்தவனே, புண்ணியத்தில் உயர்ந்தவன் என்ற
தன்மையாய் உன் புகழ் பரவுமாறு, பொன்னை ஒளியுடன் மிளிரச் செய்யும்
நெருப்பைப் போல, முன் துன்பத்தால் வருந்தினாய், துன்பத்தைப்
பொறுமையோடு தாங்கி, நிலைபெற்ற புகழ் ஒளிருமாறு நெஞ்சில் மயக்கம்
இல்லாது விளக்கினாய் என்ற காரணத்தால், பின் அவ்வொளி மேலும் சுடர்
விட இச்செல்வமெல்லாம் பெற்றாய்.
'என்ன'
என்ற வினையெச்சம் முதற்கண் தன்மை சுட்டுவதாகவும், பின்
காரணம் சுட்டுவதாகவும் கொள்க.
| 77 |
ஓர்திறந்
தின்பந் துன்ப
மொருகையாற்
பகுத்த நாதன்
பேர்திறத் திணங்கி வாழ்த்திப்
பெறும்வினை
களைக வென்னக் |
|