பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 221

கார்திறத் தொளிரு மின்போற்
     கதிரெறித் தொளிப்ப வானோன்,
சீர்திறத் தருளின் மிக்கோர்
     திருவுள மிறைஞ்சி வீழ்ந்தார்.
 
''ஓர் திறத்து இன்பம் துன்பம் ஒரு கையால் பகுத்த நாதன்
பேர் திறத்து இணங்கி வாழ்த்தி, பெறும் வினை களைக'' என்ன,
கார் திறத்து ஒளிரும் மின் போல் கதிர் எறித்து ஒளிப்ப வானோன்,
சீர் திறத்து அருளின் மிக்கோர் திரு உளம் இறைஞ்சி வீழ்ந்தார்.

     ''இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே தன்மையாய்த் தன் ஒரே
கையால் வகுத்துத் தந்த ஆண்டவன் தன் பெருவல்லமையால் எதைத்
தந்தாலும் இணக்கத்தோடு ஏற்று அவனை வாழ்த்தி, அதன் மூலம்
பெறவேண்டிய தீவினைப் பயனை அதன்மூலம் களைவீராக'' என்று
சொல்லி, கரு மேகத்தினின்று ஒளிரும் மின்னல் போல் கதிர் வீசி வானவன்
மறைந்தான். தாம் பெற்ற செல்வத்தின் அளவிற்குக் கருணையிலும்
சிறந்தோராகிய தொபீயனும் தயோதரனும் தெய்வத் திருவுளத்தை வணங்கித்
தரையில் விழுந்து பணிந்தனர்.

 
              78
மிடிமுகத் தெஞ்சாச் செல்வம்
     விளைமுகத் தோங்கா நீரார்
படிமுகத் திணையா வன்பிற்
     படுங்குறை யெவர்க்கு நீக்கிக்
கடிமுகத் தடைந்த வாழ்க்கை
     கனிபொதுப் பயனன் றாக
விடிமுகத் துறைதீ தென்ன
     விமிழுறப் பகுத்து வாழ்ந்தார்.
 
மிடி முகத்து எஞ்சா, செல்வம் விளை முகத்து ஓங்கா நீரார்
படி முகத்து இணையா அன்பின் படும் குறை எவர்க்கும் நீக்கி,
கடி முகத்து அடைந்த வாழ்க்கை கனி பொதுப் பயன் நன்று ஆக,
இடிமுகத்து உறை தீது என்ன, இமிழ் உறப் பகுத்து, வாழ்ந்தார்.