|
சிவாசிவனும்
மறுபிறப்பும்
-
மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
| 80 |
கோல மிட்டவங்
கக்குட மொத்தவண்
சூல மக்கணி கொக்கணி தொக்கணி
சால மிக்கத வத்துருத் தாங்கிநற்
சீல மற்றசி வாசிவன் செப்பினான். |
| |
|
கோலம் இட்ட
அங்கக் குடம் ஒத்து, அவண்
சூலம் அக்கு அணி கொக்கு அணி தொக்கு அணி
சால, மிக்க தவத்து உருத் தாங்கி, நல்
சீலம் அற்ற சிவாசிவன் செப்பினான்.
|
கைகால்
போன்ற உறுப்புகளுடன் அழகு செய்து வைத்த குடம்
போன்று, கையில் திரிசூலமும் மார்பில் சங்கு மணி மாலையும் தலையில்
கொக்கு இறகு செருகிய அணி அழகும் காதில் தொங்கவிட்ட குண்டல
அணியும் சிறந்து விளங்க, மிக்க தவக்கோலம் தாங்கி, அதற்கேற்ற
நல்லொழுக்கம் இல்லாதவனாகிய சிவாசிவன் என்ற ஒருவன் அக்கூட்டத்தில்
இருந்தான். அவன் சூசையை நோக்கிப் பின்வருமாறு சொன்னான்:
| 81
|
அற்ற வல்லிய
றாதுறு நூலெனப்
பெற்ற விப்பிறப் பிற்கொடை யெப்பிறப்
புற்ற தென்னினும் புக்கொழி யாதுயிர்
பற்ற வந்துப யன்றரு மேயென்றான். |
| |
''அற்ற அல்லி
அறாது உறு நூல் என,
பெற்ற இப் பிறப்பின் கொடை எப் பிறப்பு
உற்றது என்னினும் புக்கு ஒழியாது, உயிர்
பற்ற வந்து பயன் தருமே?'' என்றான். |
''அறுத்து
அல்லிப் பூக் காம்பை விட்டு அறாமல் தொடரும் அதன்
நூல் போல, பெற்ற இந்தப் பிறப்பில் ஒருவள் செய்த தானம் பின் அவன்
எப்பிறப்பு எடுத்தாலும் நீங்காமல் கூடவே புகுந்து, அவன் உயிரோடு பற்றிக்
கொண்டு வந்து பயன் தரும் அல்லவா?''
|