பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 227

''இரு வகைப் படும் இவ்வுயிர் விட்டு, இடை
ஒரு வகைப் படும் மற்று உயிர் தன் வினை
ஒரு வகைப் படும் ஒப்பனைத் தீ உலகு
அரு வகைப் படும் அல்லலில் வீயும் ஆல்.


     ''முற்றிலும் தீயதும் முற்றிலும் தூயதுமாகிய இவ்விரு வகைப்படும்
உயிர்களைத் தவிர்த்து, இவற்றிற்கு இடைப்பட்டதாய் வரும் வகையைச்
சேர்ந்த மற்ற உயிர் கொண்ட வினைக் கறை, ஒப்பனை செய்யும் ஒரு
வகையான நெருப்புலகத்தில், அரிய வகையாய் அனுபவிக்கும் துன்பத்தில்
கிடக்கும்.

 
                  89
கோது கொண்ணிதி பொன்செயுங் கொல்லரே
யூது கொந்தழ லொப்பனை செய்தெனத்
தீது கொள்ளுயிர் தீதள வன்னதீ
போது மட்டும்பொ ருந்தவ ருத்துமால்.
 
''கோது கொள் நிதி பொன் செயும் கொல்லரே
ஊது கொந்து அழல் ஒப்பனை செய்து எனத்
தீது கொள் உயிர் தீது அளவு அன்ன தீ
போதும் மட்டும் பொருந்த வருத்தும் ஆல்.

     'பொன்னைக் கொண்டு தொழில் செய்யுங் கொல்லர் ஊதி எழுப்பு
கின்ற கொத்தான நெருப்பு உலோகக் கலப்பாகிய குற்றமுள்ள பொன்னைச்
செப்பம் செய்வது போல, மேலே காட்டியது போன்ற பாவக் கறையாகிய
தீது கொண்ட உயிரின் தீதினது அளவிற்குத் தக்கபடி அந்த நெருப்பு
நேரமும் பொழுதும் பொருந்த அவ்வுயிரை வருத்தும்.

 
                       90
பொன்வி ளக்கிய போதிலக் கொல்லரே
மின்வி ளக்கிய மென்னகை செய்தென
வின்வி ளக்கிய வவ்வுயி ரெம்பிரான்
மன்வி ளக்கிய மார்பணி யாமோல்.
 
''பொன் விளக்கிய போதில் அக் கொல்லரே
மின் விளக்கிய மேல் நகை செய்து என
இன் விளக்கிய அவ் வுயிர் எம் பிரான்
மன் விளக்கிய மார்பு அணி ஆகும் ஆல்.