''அரிய வேத
எட்டெட்டும் எண் ஆகமத்து
உரிய இவ் வழி ஒன்று அலது இல்லையால்,
பிரிய மாண்டு உயிர் பின்பு பிறத்தலே
கரிய கங்குல் கனா'' என ஓதினான். |
''அரிய
வேதத்துள்ள எழுபத்திரண்டு நூற்பிரிவுகளுள்ளும் உரிய
இவ்வழி ஒன்றே அல்லாமல் வேறு ஒன்றும் காணப்படவில்லை. ஆகையால்,
உயிர் பிரிய உடம்பு மடிந்து பின்பு பிறத்தலென்பது கரிய இரவிற் கண்ட
கனவுக்கே ஒப்பாகும்'' என்று சூசை கூறி முடித்தான்.
'ஒன்று'
என்றது, மாறிமாறிப் பிறந்து இறந்து உழலும் பல பிறப்பு
வழியன்றி, பிறந்து இறந்த பின் நரகம் மோட்சம் உத்தரிக்குமிடம் என்று
முடிவுபெறும் ஒரே வழி என்பதாம். எட்டெட்டு அறுபத்து நாலும்
அதனோடு எட்டுமாக எழுபத்திரண்டு திருமறை நூல்கள்.
இம்மை -
மறுமை விளக்கம்
--
காய், -- காய், -- காய், -- காய், - மா, தேமா.
| 93 |
கூறியவிந்
நிலையுளதேற் குன்றுடலு முடல்வனப்புங்
குறையும்
வாழ்வு
மாறியவிந் நிலையுலகில் வழங்கியகா னீதியிதோ
வழுவோ
கூறாய்
தேறியவிந் நிலைமிக்கோ யென்றுசிவா சிவன்கேட்பத்
தெளிந்த
வார்வத்
தூறியவின் னிலைமதுச்சொற் பூங்கொடியோ னுரிமறைநூ
லுரைத்தான்
மீண்டே. |
| |
''கூறிய இந்
நிலை உளதேல், குன்று உடலும் உடல் வனப்பும்
குறையும்
வாழ்வும்
மாறிய இந் நிலை உலகில் வழங்கிய கால் நீதி இதோ வழுவோ?
கூறாய்
தேறிய இன் நிலை, மிக்கோய்'' என்று சிவாசிவன் கேட்ப,
தெளிந்த
ஆர்வத்து
ஊறிய இன் நிலை மதுச் சொற் பூங் கொடியோன் உரி மறை
நூல்
உரைத்தான் மீண்டே: |
|