பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 23

      இழந்தனை - இழத்தல் உறுதி என்பதனால் இறந்த காலமாகக்
கூறப்பட்டது.

 
                              38
கான்மு கத்துயர் கன்மலை யனையவெங் கொடிய
கோன்மு கத்திலுங் கொலுந்துயர் முகத்திலுங் கோடா
நூன்மு கத்துரை யேலிய னுவன்றவை கேட்டுத்
தான்மு கத்திடர் தளிர்ப்பநொந் தியம்புதலுற்றான்.
 
கால் முகத்து உயர் கல் மலை அனைய வெங் கொடிய
கோன் முகத்திலும் கொலும் துயர் முகத்திலும் கோடா
நூல் முகத்து உரை ஏலியன், நுவன்றவை கேட்டு,
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து, இயம்புதல் உற்றான்:

      காற்றின் முன் உயர்ந்த கல் மலைபோல் அசையாத மிகக் கொடிய
மன்னன் முகத்திற்கு அஞ்சாமலும், அதனால் தனக்கு ஏற்படக் கூடிய
கொல்லும் தன்மை வாய்ந்த துயரத்திற்கு அஞ்சாமலும், தவறாத நீதி நூலை
அடிப்படையாகக் கொண்ட அறிவுரைகளைக் கூறும் தன்மை வாய்ந்த
ஏலியன் மாதியன் கூறியவற்றைக் கேட்டுத் தன் முகத்தில் துன்பம் தளிர்விட
நொந்து, பின்வருமாறு கூறத் தொடங்கினான்:

                      
                    ஏலியன் எதிர்மொழி

      - விளம், - விளம், - மா, கூவிளம்

 
                      39
தன்னுயி ராகமற் றுயிர்க டாங்கிட
மின்னுயிர் மணிமுடி வேய்ந்த பாத்திபன்
கொன்னுயிர் வழுவென வய்யங் கொண்டுபன்
மன்னுயி ரொழித்தலோ வடுவி லாதென்றான்.
 
"தன் உயிராக மற்று உயிர்கள் தாங்கிட
மன் உயிர் மணி முடி வேய்ந்த பாத்திபன்
கொன் உயிர் வழு என அய்யங் கொண்டு பல்
மன் உயிர் ஒழித்தலோ வடு இலாது?" என்றான்.