பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 233

                        97
வைகறையொத் தள்ளிருளு மொளியுமில சிவாசிவனுண்
     மயங்கி நிற்ப
மொய்கறையற் றுணர்கவென முந்நீர்சூழ் பூதலத்தின்
     முயலின் மிக்கோன்
செய்கறையற் றுயர்நீதித் திறங்காட்டி நெடிதுண்ட
     தெளியா மையல்
பெய்கறையற் றொளிமொய்ப்பப் பெருஞ்சுருதி
     விளக்கேந்திப் பெரியோன் சொன்னான்.
 
வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள்
                              மயங்கி நிற்ப,
''மொய் கறை அற்று உணர்க'' என, முந்நீர் சூழ் பூதலத்தில்
                              முயலின் மிக்கோன்
செய் கறை அற்று உயர் நீதித் திறம் காட்டி, நெடிது உண்ட
                              தெளியா மையல்
பெய் கறை அற்று ஒளி மொய்ப்பப் பெருஞ் சுருதி விளக்கு
                    ஏந்திப் பெரியோன் சொன்னான்:

     செறிந்த இருளும் தெளிந்த ஒளியும் இல்லாத அதிகாலைப்
பொழுதைப் போன்று சிவாசிவன் மயங்கிப் பேச்சற்று நின்றான்
பெரியோனாகிய சூசை, ''மனத்தில் மொய்த்த மாசு நீங்கப் பெற்று உண்மைப்
பொருளை உணர்வாயாக'' என்று தொடங்கி, கடல் சூழ்ந்த பூவுலகில் செயல்
திறம் மிக்கோனாகிய ஆண்டவன் செய்துள்ள குற்றமற்று உயர்ந்த நீதியின்
இயல்பைக் காட்டி, அவன் நெடுங்காலம் உட்கொண்ட தெளியாத மயக்கம்
பெய்து தந்த கறை நீங்கி ஒளி மொய்க்குமாறு, பெருமை வாய்ந்த
வேதமாகிய விளக்கை ஏந்திப் பின் வருமாறு சொன்னான் :

 
                 98
தெருட்செல்வ மிக்கிறையோன் முட்டிலத்தும்  
     
பெய்முகிற்போற் சிந்திப் பெய்த
பொருட்செல்வம் வறிதென்னப் பூரியர்க்குஞ்
      சால்பிறைப்பான் பொருவா மாட்சி
யருட்செல்வ நசைக்களவா யாவருங்கைக் கொண்டோங்க
      வயமே தந்தான்
மருட்செல்வ மற்றவையு மாகியது மறப்பயனோ மதியின்
      மிக்கோய்.