''சலத்து எல்லாம்
ஓர் நிலையோ? தருவுக்கு எல்லாம் ஓர்
கனியோ? தரணி எங்கும் நிலத்து
எல்லாம் ஓர் விளைவோ? நமக்கு எல்லாம் ஓர் முகமோ?
நிலையும் பல் ஆய்,
குலத்து எல்லாம் பொது நின்று குன்றாச் சீர் அறம் ஒன்றே
குறை ஒன்று இன்றி,
புலத்து எல்லாம் ஆகும் எனின், புற விகிர்தம் ஒன்று எண்ணார்
புலமை மிக்கோர். |
''நீரெல்லாம்
ஒரே தன்மை உடையதோ? மரங்களுக்கெல்லாம் ஒரே
வகையான கனியோ? நிலத்திலெங்கும் ஒரே வகையான விளைபயிரோ?
நமக்கெல்லம் ஒரே வகையான முகமோ? இவ்வாறு நிலையெல்லாம்
பலவகைப் படுகையில், எல்லாக் குலத்திற்கும் பொதுவாக நின்று குறையாத
சிறப்புப் பெற்றுள்ள அறம் ஒன்றே குறையொன்றும் இல்லாதது; எல்லா
இடத்தும் செய்யக் கூடியது. எனவே, அறிவு மிக்கோர் அறம் ஒன்றையே
நோக்குவர்; வெளியே காணும் இவ்வகை வேற்றுமையை ஒரு பொருட்டாக
மதியார்.
'தருவுக்கு'
என்று வேற்றுமையில் உகரச் சாரியை ஏற்கும் சொல்
இங்கு 'தருக்கு' எனச் சாரியை இன்றி நின்றது.
| 100 |
காறுபடுந்
திறத்திவன்கைப் பொருளவற்கே யிவற்கவன்கைக்
கருமம்
வேண்டி
வேறுபடு மனுக்குலமே யொருப்படுத்து மிருகையா மிடிவாழ்
வன்றிக்
கூறுபடுந் திறத்தென்றும் வாழ்ந்தறவோ ரழத்தீயோர்
குவவிற்
காண்கி
லீறுபடு நாளில்வரு மிருவினைவீ யாப்பயன்பின் பில்லை
யென்பார்.
|
| |
|
''காறு படும்
திறத்து இவன் கைப்பொருள் அவற்கே இவற்கு
அவன் கைக் கருமம் வேண்டி
வேறுபடும் மனுக்குலமே ஒருப்படுத்தும் இரு கையாம் மிடி
வாழ்வு. அன்றி,
கூறுபடும் திறத்து என்றும் வாழ்ந்து அறவோர், அழத் தீயோர்
குவவில் காண்கில்,
ஈறுபடு நாளில் வரும் இரு வினை வீயாப் பயன் பின்பு
இல்லை என்பார்.
|
|