|
''அளவிற்கு
உட்பட்ட தன்மையாய் இவன் கையிலுள்ள பொருள்
அவனுக்கு வேண்டியிருக்க, இவனுக்கு அவனது கையாற் செய்யும் தொழில்
வேண்டியிருக்க, இவ்வாறு வறுமையும் செல்வ வாழ்வும் வேறுபடும் மனித
இனத்தை ஒன்றுபடுத்தும் இரண்டு கைகள் போன்றன ஆகும். அன்றியும்,
பிரித்துக் காட்டும் தன்மையாக அறமுடையோர் என்றும் செல்வ வாழ்வு
வாழ்ந்தும் தீயோர் வறுமையால் அழவுமாக இவ்வுலகில் காணப்படுமாயின்,
மக்கள் அதனைக் கண்டு, இக் கைகண்ட பயனே அல்லாமல், பின்பு
இறக்கும் நாளில் வந்து சேர்வதாகிய இரு வினைகளின் அழியாப் பயன்
என்று ஒன்றும் இல்லையெனக் கொள்வர்.
'வேண்டி'
என்ற சொல்லை ஈரிடத்தும் கூட்டுக.
| 101 |
திறந்தகா
வாழ்விதுவாய்த் திறம்பாவான் வாழ்வதெனத்
தெளிய
நாமே
பிறந்தகா லுயர்குலமுஞ் சீர்த்திறமுந் தெரிந்திங்கண்
பிறப்பா
ரின்றி
யிறந்தகா லுயர்வான்மே லிணையாவாழ் வுற்றாளு
மியல்பொன்
றன்றோ
மறந்தகா நல்வினை நாஞ் செய்யளவொத் தன்றெவர்க்கும்
வழங்கு
மென்றான். |
| |
''திறம் தகா
வாழ்வு இதுவாய், திறம்பா வான் வாழ்வது எனத்
தெளிய
நாமே,
பிறந்த கால் உயர் குலமும் சீர்த்திறமும் தெரிந்து இங்கண்
பிறப்பார்
இன்றி,
இறந்த கால் உயர் வான்மேல் இணையா வாழ்வு உற்று ஆளும்
இயல்பு
ஒன்று அன்றோ
மறம் தகா நல் வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும்
வழங்கும்?''
என்றான். |
''பிறந்தபோது
உயர்ந்த குலமும் செல்வ வகையும் தமக்கெனத்
தெரிந்து கொண்டு இங்கே பிறப்பார் இல்லை இவ்வுலக வாழ்வு
நிலையற்றதாய் இருக்க, வானுலக வாழ்க்கையே மாறுபடாமல் நிலை
பெறுவதென்று நாம் தெளிய வேண்டும். இறந்தபோது வானுலகில் ஒப்பற்ற
வாழ்வைப் பெற்று ஆள்வதற்கான வாழ்க்கை நெறி ஒன்றே அவ்வானுலக
வாழ்வை நமக்கு வழங்கும்; பாவத்தோடு பொருந்தாத நல்வினையை நாம்
செய்த அளவிற்கு
|