|
ஒத்ததாக, இறந்த
அன்றே, அதனை நமக்கு வழங்கும். நமக்கு மட்டுமா?
எவர்க்குமே வழங்கும் அல்லவா?'' என்று சூசை உரையை முடித்தான்.
ஊழ்வினை
விளக்கம்
-
விளம், - விளம், - மா, கூவிளம்.
| 102 |
இற்றெலா
மியம்பியு மிவைசி வாசிவன்
முற்றெலாம் விதிவிதி முயலி னாமென
வற்றெலாம் பொறாநுமா னதற்கொர் ஞாபக
முற்றெலாந் தீர்ப்பலென் றுரைத்தெ ழீஇயினான். |
| |
இற்று எலாம்
இயம்பியும், ''இவை'' சிவாசிவன்,
''முற்று எலாம் விதி; விதி முயலின் ஆம்'' என,
அற்று எலாம் பெறா நுமான், ''அதற்கு ஓர் ஞாபகம்
உற்று எலாம் தீர்ப்பல்'' என்று உரைத்து எழீஇயினான். |
சூசை
இத்தகைய நியாயங்களை யெல்லாம் எடுத்துச் சொல்லியும்,
சிவாசிவன் ஏற்றுக் கொள்ளாமல், ''இவையெல்லாம் விதியின் செயல்;
அவ்விதி நம் முற்பிறப்புச் செய்கையால் விளைவதாம்,'' என்றான். எனவே,
அத்தகைய நிலையையெல்லாம் பொறுத்துக் கொள்ள இயலாத நுமான்
என்பவன், ''அதற்கு ஓர் அறிவுரை தரும் முறையைக் கண்டு, நானே
எல்லாம் தீர்த்து வைப்பேன்'' என்று சொல்லிக்கொண்டு எழுந்தான்.
| 103 |
பிடித்திழுத்
திறுத்திப்பேர் விதிய டாவென
வடித்தடித் துதைத்திது விதிய டாவென
விடித்திடித் தழற்கநீ விதிய டாவென
வெடித்தவர் நகக்கொடும் விதிவி லக்கினார். |
| |
பிடித்து இழுத்து
இறுத்தி, ''பேர் விதி, அடா!'' என,
அடித்து அடித்து உதைத்து, ''இது விதி, அடா!'' என,
இடித்து இடித்து, ''அழற்க நீ; விதி, அடா!'' என,
வெடித்து அவர் நக, கொடும் விதி விலக்கினார். |
|