''ஏற்ற அரும்
உணர்வினோய், இயைந்த நூல் நலோர்
போற்ற அரும் ஊழ்வினை எனப் புகன்ற பின்,
மாற்ற அரும் தலைவிதி மறுப்பவோ?'' என்றான்.
தேற்ற அரும் அயிர்ப்பு அற வளனும் செப்பினான்: |
''புகழ்வதற்கு
அரிய உணர்வு உடையவனே, பொருந்திய சமய நூல்
எழுதிய நல்லோர், தவிர்த்தற்கு அரிய ஊழ்வினை உண்டென்று சொல்லிய
பின்னர், மாற்றுதற்கு அரிய தலைவிதிக் கொள்கையை மறுக்கலாமோ?''
என்றான் சிவாசிவன். அவனது தெளிவித்தற்கு அரிய ஐயம் நீங்கும்படி
வளன் இவற்றைச் சொல்லலானான்:
ஏற்ற
+ அரும் என்பது போன்று அடிதோறும் முதற்கண் நின்ற
தொடர் 'ஏற்றவரும்' என்பது போன்று விரியாமல், 'ஏற்றரும்' என்பது
போன்று தொகுத்தல் விகாரம் பெற்றன.
| 106 |
ஊழ்வினை
யென்னினு முரிமை யோர்ந்துழி
மாழ்வினை யியற்றநீ வகுத்த வக்கரத்
தாழ்வினை யென்பவோ விறைவன் சாற்றிய
கீழ்வினை யிலமறை விரும்பிக் கேட்டியால். |
| |
|
''ஊழ் வினை
என்னினும், உரிமை ஓர்ந்த உழி,
மாழ் வினை இயற்ற நீ வகுத்த அக்கரத்
தாழ் வினை என்பவோ? இறைவன் சாற்றிய
கீழ் வினை இல மறை விரும்பிக் கேட்டி ஆல்.
|
''நூலோர்
ஊழ்வினை உண்டு என்றாரெனினும், அதன் உரிமைப்
பொருளை உணர்ந்து பார்த்தவிடத்து, மயக்கம் விளைவிக்க நீ சொன்ன
தலை எழுத்து என்னும் தாழ்வான செயலென்று அதனைக் கொள்ளலாமோ?
அது விளங்க, இறைவனே சொல்லிய கீழ்மை இல்லாத வேதப் பொருளை
விரும்பிக் கேட்பாயாக.
'ஆல்'
அசை. ஊழ்வினை என்ற கருத்திற்கு மரபுவழிப் பொருள்
கொள்ளாது, புதுப் பொருள் கொண்டு, அதனை வேதப் பொருள்
அடிப்படையில் விளக்க முற்படுகிறான் வளன்.
|