பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 242

என்று விலக்கிய ஒரு கனியை மட்டும் உண்ணாதவாறு, ஆண்டவனே மிக
அழுத்தி உரைத்து நன்கு விளக்கினான்.

     உணா - உணாது; ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

 
                   111
புண்டகா விளிவுறா புதல்வ ரோடுநீர்
மண்டகா நலத்தொடு வாழு வீர்மறுத்
துண்டகா லுவர்ப்புளைப் புலப்பு மற்றநோய்
விண்டகா வகன்றுறீஇ விம்மு வீரென்றான்.
 

'' 'புண் தகா, விளிவு உறா, புதல்வரோடு நீர்
மண் தகா நலத்தொடு வாழுவீர் மறுத்து
உண்ட கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய்
விண்ட கா அகன்று உறீஇ விம்முவீர்' என்றான்


     ''ஆணடவன் அவர்களை நோக்கி, ''அவ்வாறு அக்கனியை உண்ணா
திருந்தால், நீங்கள் துன்பம் பொருந்தாமலும், சாவு அடையாமலும், பெற்ற
மக்களோடும் மண் கொள்ளாத நலத்தோடும் வாழ்வீர்கள்; மீறி அக்கனியை
உண்டபோதே வெறுப்பு சோர்வு சாவு மற்றத் துன்பங்கள் எல்லாம் அன்றே
பெற்று, விரிந்த மலருடைய சோலையை விட்டுப் போய்த் துன்புற்றுப் புலம்பு
வீர்கள் என்றான்;

     'மண் தகா' என்றவிடத்துத் 'தகா','' ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்; ஏனையிடத்து ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், உறா -
ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். உறீஇ - சொல்லிசை அளபெடை.

 
                     112
மொய்த்ததோர் வானல முரிந்தி ழந்துளந்
தைத்ததோர் பழிவிடாச் சவம னுக்குலம்
வைத்ததோ ரளவில வாழு மோவெனப்
பைத்ததோ ரரவுருப் படவந் தாயதே
 
''மொய்த்தது ஓர் வான் நலம் முரிந்து இழந்து, உளம்
தைத்தது ஓர் பழி விடாச் சவம், 'மனுக் குலம்
வைத்து அது ஓர் அளவு இல வாழுமோ?' எனப்
பைத்தது ஓர் அரவு உருப் பட வந்து ஆயதே.