பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 243

     ''திரண்டு கிடந்த ஒப்பற்ற வானுலக நன்மை ஒடிய இழந்து, அதனால்
தன் உள்ளத்தைக் குத்திக் கொண்டிருந்த பழியை விடாத பேய், 'மனித
இனம் அவ்வானுலக நலத்தைத் தனக்கு உரியதாக வைத்து ஓர் அளவில்லாத
சிறப்போடு வாழுமோ?' என்று பொறாமை கொண்டு, படம் உள்ளதோர்
பாம்பின் உருவத்தில் வெளிப்பட்டு வந்து சேர்ந்தது.

     பை - பாம்புப் படம், பைத்து - பை உள்ளது. பைத்தது - பைத்து
அது : பை உள்ளதாகிய அது; பை உள்ளது. பேய் முதலில் வானவனாகப்
படைக்கப்பட்டது. கடவுள் கட்டளைக்குப் பணியாமையால் பேயாகி,
வானுலக நலத்தை இழந்து, நரக நெருப்பில் தள்ளுண்டது.

 
                   113
பேதையாய்ப் பிரிந்தபெண் பிணங்கண் டிக்கனி
கோதையா யுணாமையென் குணமி தேயென
வாதையா யிறத்தலாய் வரமி லேமென்றான்
றாதையாய்க் கடவுளென் றரிவை சாற்றினாள்.
 
''பேதையாய்ப் பிரிந்த பெண் பிணம் கண்டு, 'இக்கனி,
கோதையாய், உணாமை என்? குணம் இதே', என,
'வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான்
தாதையாய்க் கடவுள்' என்று அரிவை சாற்றினான்.

     ''பேதையாய்த் தன் கணவனைப் பிரிந்து அங்கு வந்த பெண்ணை
பேய் கண்டு, 'பூமாலை போன்றவளே, இந்தக் கனியை உண்ணாதிருப்பது
ஏன்? இது குணமுள்ளதாயிற்றே' என்றது. அப்பெண், 'தந்தையாகிய கடவுள்,
இதை உண்டால் துன்பங்களுக்கு ஆளாகிச் சாவும் அடைந்து வரங்களையும்
இழந்து போவோம் என்றான்' என்று கூறினாள்.

 
                        114
கழீஇயின மணிநலாய் கலங்கல் தேன்றுளி
தழீஇயின விக்கனி யருந்திற் சாவிலா
தெழீஇயின வுணர்வுறீஇ யிறைவர் மானுவீர்
குழீஇயின வரத்தெனக் கூளி கூறிற்றே.