பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 245

''கனி முகம் கண்டுழி வெருவி, காந்தைதன்
பனி முகம் கண்டுழிப் பரிவு உற்று ஏங்கினான்.
நுனி முகம் கண்ட பேய், 'துறக்கின், மாது இறீஇ,
தனி முகம் காண்டி' என்று உளத்தில் சாற்றிற்றே


     ''ஆடவன் கனியைத் தன் முகத்தெதிரே கண்டதும், கடவுள்
கட்டளையை நினைந்து, அஞ்சினான்; தன் மனைவியின் வருந்திய
முகத்தைக் கண்டபோது, மறுக்க முடியாமல், இரங்கி ஏங்கினான். அவன்
முகத்தில் வருத்தத்தைக் கண்ட பேய், 'கனியை உண்ணாது துறந்தால்,
இப்பெண் இறந்து, உன் தனி முகத்தையே நீ பார்த்துக் கொண்டிருப்பாய்'
என்று அவன் உள்ளத்துள் உணரச் சொல்லிற்று.

 
                    117
மண்ணலம் பொறித்ததோர் வதனம் வெஃகியே
யுண்ணலங் கெடவொருங் குலகெ லாங்கெடப்
பெண்ணலங் கொடியதோர் பெருநஞ் சாகிமேல்
விண்ணலங் கெடுங்கனி விழுங்கி னானென்றான்.
 
''மண் நலம் பொறித்தது ஓர் வதனம் வெஃகியே,
உள் நலம் கெட, ஒருங்கு உலகு எலாம் கெட,
பெண் நலம் கொடியது ஓர் பெரு நஞ்சு ஆகி, மேல்
விண் நலம் கெடும் கனி விழுங்கினான்'' என்றான்.

     ''மண்ணிலுள்ள அழகெல்லாம் ஒருசேரப் பொறித்த ஒரு பெண்ணின்
முகத்தை விரும்பி, பெண்ணின் அழகே கொடியதொரு பெரு நஞ்சாக மாறிய
தன்மையால், உலகமெல்லாம் ஒருங்கு கெடவும் தன் மனநலம் கெடவும்,
அதன் மேலும் விண்ணுலக நலமும் கெடுவதற்குக் காரணமான கனியை
அவ்வாடவன் விழுங்கினான்'' என்று சூசை உரையை முடித்தான்.

                 பழவினையும் பரிகாரமும்

     - மா, - மா, - - காய், - மா, - மா, - - காய்

 
                  118
பொன்னார் மணிப்பூண் சாயலிறேம்
     பூங்கொம் பனையார் திருமுகத்தின்
முன்னார் நிற்பா ரென்றெவரு
     மொழிந்து பனிக்கு முளத்தெஞ்ச