பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 246

வன்னா ரன்றக் கனியருந்தி
     யழிவா ரென்ன வறிந்திறையோ
னின்னா வுருமப் பணிசெய்வ
     தென்னை யென்றான் விகரனென்பான்.
 
''பொன் ஆர் மணிப் பூண் சாயலில் தேம் பூங் கொம்பு அனையார்
                                   திருமுகத்தின்
முன் ஆர் நிற்பார்?'' என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து
                                   எஞ்ச,
''அன்னார் அன்று அக் கனி அருந்தி அழிவார் என்ன அறிந்து
                                   இறையோன்
இன்னா உகும் அப் பணி செய்வது என்னை?'' என்றான் விகரன்
                                   என்பான்.

     சூசை சொல்லியவற்றைக் கேட்ட யாவரும், ''பொன்னிற் பதித்த
மாணிக்க அணிகலன் போன்ற தோற்றங்கொண்ட தேன் நிறைந்த
பூங்கொம்பு போன்ற மகளிர் தம் அழகிய முகத்தின் முன் எதிர்த்து நிற்கக்
கூடியவர் யார்?'' என்று கூறி நடுங்கும் உள்ளத்தோடு மெலிந்தனர். விகரன்
என்னும் பெயருள்ள ஒருவன் ''அவர்கள் அன்று அக்கனியை உண்டு
அழிவு தேடிக் கொள்வரென்று அறிந்திருந்தும், இறைவன் துன்பம் சொரியும்
அக்கட்டளையைச் செய்வது ஏன்?'' என்றான்.

 
               119
பூண்டா ராசன் வளர்த்தமதுப்
     பொழிகா யுண்பா ரென்றறிந்துந்
தீண்டா தெனலுந் தீண்டினரைத்
     தெண்டித் திடலுங் கொடிதெனவோ
வேண்டாச் சொல்லாய் சொன்மினென
     விளம்பி நக்கான் சிவாசிவன்றான்
றாண்டா வுணர்வின் மறைவாயான்
     றயவே தளிர்த்து மீண்டுரைத்தான்.
 
'பூண் தார் அரசன் வளர்த்த மதுப் பொழி காய் உண்பார் என்று
                                        அறிந்தும்,
'தீண்டாது' எனலும், தீண்டினரைத் தெண்டித்திடலும் கொடிது
                                        எனவோ?