பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 247

வேண்டாச் சொல்லாய், சொன்மின்'' என விளம்பி நக்கான்
                              சிவாசிவன் தான்.
தாண்டா உணர்வின் மறை வாயான் தயவே தளிர்த்து மீண்டு
                              உரைத்தான்:


     சிவாசிவன் விகரனை நோக்கி, ''மாலை அணிந்த அரசன் ஒருவன்
தான் வளர்த்த தேன் பொழியும் காயைப் பிறர் கவர்ந்து உண்பாரென்று
அறிந்திருந்தும், 'அதனை எவரும் தொடலாகாது' என்று கட்டளை
பிறப்பித்தலும், தவறித் தொட்டவரைத் தண்டித்தலும் கொடிது என்னலாமோ?
வேண்டாச் சொல் பேசுபவனே, நீயே பதில் சொல்வாய்'' என்று சொல்லித்
தானும் நகைத்தான். பிறர் தாண்ட முடியாத உணர்வோடு வேதம் பேசும்
வாயை உடையவனாகிய சூசை தயவு காட்டி மீண்டும் இவ்வாறு சொல்லத்
தொடங்கினான்:

     சிவாசிவன் மன இருன் கலைந்து சூசை பக்கம் சேர்ந்த நிலையை இது
காட்டுகிறது. 'சொன்மின்' - 'மின்' பன்மைக்கு வருவது இங்கு ஒருமைக்கு
வந்தது.

 
                     120
மானா விடமுண் டன்றன்னார்
     வான்பே றிழந்தே வரமிழந்தே
தேனா ரலர்க்கா விழந்தேதாஞ்
     சிந்தை பனிப்ப நாமுமழ
நானா நஞ்சு நல்குரவு
     நகவு நோயுங் கொடுங்கூற்றுங்
கானால் முள்ளுங் கொல்விலங்குங்
     கடிதிவ் வுலகிற் படர்ந்தனவே.
 
''மானா விடம் உண்டு அன்று அன்னார் வான் பேறு இழந்தே,
                                   வரம் இழந்தே,
தேன் ஆர் அலர்க் கா இழந்தே தாம் சிந்தை பனிப்ப, நாமும்
அழ
நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடுங் கூற்றும்
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும் கடிது இவ் வுலகில்
                                   படர்ந்தவனே.