|
''ஆதித்
தாய் தந்தையராகிய அவர்கள் நிகரில்லாத நஞ்சை அக்கனி
வடிவில் அன்று உண்டு, வான்வீடு அடைவதற்கான பேறும் இழந்து, வரமும்
இழந்து, தேன் நிறைந்த மலர்ச் சோலையையும் இழந்து தாமே சிந்தை
நடுங்கினர். அவர்களோடு சேர்ந்து பிற்காலத்தில் நம் போன்ற
மனிதரெல்லாம் அழுமாறு, இவ்வுலகில் பல வகை நஞ்சுகளும் வறுமையும்
நிந்தையும் நோயும் கொடிய சாவும் காட்டில் நிறைந்த முள்ளும் கொல்லும்
விலங்களும் விரைவில் பரவின.
| 121 |
வாயே யுணுநஞ்
சுறுப்பெல்லா
மருவி
வருத்தும் வண்ணமெனத்
தாயே தாதை கொண்டவினை
தனைய
ராநாங் கொண்டழுங்கத்
தீயே வியதீ தொடுசனித்துத்
தெளியா
வுணர்வின் மனங்கலங்க
நோயே பாலுண் டிடர்க்கரத்தி
னுடங்க
வினையின் விளைவுற்றோம். |
| |
''வாயே உணும்
நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என,
தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க,
தீ ஏவிய தீதொடு சனித்து, தெளியா உணர்வின் மனம் கலங்க,
நோயே பால் உண்டு, இடர்க் கரத்தின் நுடங்க வினையின் விளைவு
உற்றோம்.
|
''வாய்
உண்ணும் நஞ்சு உறுப்புகளிலெல்லாம் பரவி வருத்தும் தன்மை
போல, நம் ஆதித் தாய் தந்தையர் செய்து கொண்ட தீவினையை அவர்தம்
மக்களாகிய நாமும் கொண்டு வருந்துமாறு, தீமைக்குத் தூண்டுதலாகிய
பாவத்தோடு பிறந்து, தெளியாத உணர்வோடு மனம் கலங்க, நோயைப்
பாலாக அருந்தி, துன்பத்தின் கையில் துவண்ட வண்ணமாய்
அத்தீவினையின் பயனை அடையலானோம்.
|