பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 249

           122
சொன்ன குரவர் காலமெனத்
     துதிநூ லோர்முற் பிறப்பென்றார்
முன்ன மவரா லெமக்குற்ற
     முதிய வினையூழ் வினையென்றா
சின்ன வினையல் லாதுதலை
     யெழுத்தும் வேறூழ் வினையுமிலை
யன்ன பிறப்பல் லாதிறந்தே
     யயர்ந்து பிறப்பா ரிலையென்றான்.
 

''சொன்ன குரவர் காலம் எனத் துதி நூலோர் 'முற்பிறப்பு' என்றார்;
முன்னம் அவரால் எமக்கு உற்ற முதிய வினை 'ஊழ்வினை' என்றார்.
இன்ன வினை அல்லாது, தலை யெழுத்தும் வேறு ஊழ்வினையும் இலை;
அன்ன பிறப்பு அல்லாது, இறந்தே அயர்ந்து பிறப்பார் இலை'' என்றான்.


     ''முன் சொன்ன ஆதிப் பெரியோர் காலம் என்பதை நினைவிற்
கொண்டு, அதுவே 'முதற் பிறப்பு' என்ற பொருளைக் கருதி, போற்றத் தக்க
நூற் புலவர் அதனை 'முற்பிறப்பு' என்றனர்; அது போலவே, முன்னம்
அவர்களால் எம்போன்ற மனிதருக்கெல்லாம் ஏற்பட்ட பழைய பாவ
வினையைப் 'பழைய வினை' என்ற பொருளில் 'ஊழ்வினை' என்றனர்.
இத்தகைய வினையும் அதன் பயனும் அல்லாமல், தலையெழுத்தென்றும்
ஊழ்வினையென்றும் வேறு எதுவும் இல்லை; அத்தகைய பிறப்பின் வழியாக
மனித இனம் பெருகி வருவதே அல்லாமல், இறந்து உறங்கிக் கிடந்து
மீண்டும் பிறப்பு எடுத்து வருவாரும் இல்லை'' என்று சூசை விளக்கி
முடித்தான்.

 
                123
விரிந்தாய் கதிர்செய் விடியலென
     விளம்புந் தெளிந்த சிவாசிவனே
பரிந்தா யென்னோ யுரைவாளாற்
     பசுமட் பகைவன் கைநாணி