னரிந்தா
யுளத்தின் மருளெல்லா
மமுதே
யுயிரே யூட்டியருட்
புரிந்தாய் புரந்தாய் சுடர்த்தவத்துப்
புலமை
புல்லாக் கலைநல் லோய். |
| |
விரிந்து ஆய்
கதிர் செய் விடியல் என விளம்பும் தெளிந்த
சிவாசிவனே:
''பரிந்தாய் என் நோய் உரை வாளால்; பசு மண் பகைவன்
கை
நாணின்
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம்; அமுதே உயிரே
ஊட்டி
அருள்
புரிந்தாய்; புரந்தாய், சுடர்த் தவத்துப் புலமை புல்லாக் கலை
நல்லோய்!
|
இவற்றையெல்லாம்
கேட்டு, கதிரவனின் அழகிய கதிர் விரிந்து
அமைந்த விடியற் காலைபோல் மனம் தெளிந்த சிவாசிவன் சூசையைப்
போற்றிச் சொல்வான்: 'ஒளி பொருந்திய தவத்தோடு, கற்றுப் புலமை
பொருந்துதலின்றி இயல்பாகக் கலை நலம் பொருந்திய நல்லவனே, உன்
சொல்லாகிய வாளினால் என் துன்பமெல்லாம் அறுத்தெறிந்தாய். மனத்தின்
மயக்கமெல்லாம், பச்சை மண்ணுக்குப் பகைவனாகிய குயவன் தன் கைக்
கயிற்றால் புறத்துத் தோன்றாது அரிவது போல அரிந்தாய். அமுதத்தையும்
உயிரையும் எனக்கு அருள் புரிந்தாய் நீயே என்னைக் காத்தாய்.
சக்கரத்தில்
வைத்துப் பச்சை மண்ணைப் பானையாக உருப் பிடிக்கும்
குயவன் அம்மண்ணின் அடியில் முன்னே இட்டு வைத்த கயிற்றால்
ஊடறுத்துப் பானையைப் பிரிப்பான். சிவாசிவன் தெளிந்தும் தெளியாத
நிலை, ''வைகறையொத் தள்ளிருளுமொளியுமில் சிவாசிவன்'' என முன் (97)
கூறப்பட்டது காண்க.
| 124 |
கனியே யுண்டு
வந்தவினை
கண்ணிக்
கற்றோ ரோதியநூ
னனியே யுணரா பொய்கலந்தே
நன்னீர்
கடலுட் கலந்துபோ
றுனியே தளிர்ப்பத் தலைவிதியுந்
தொலையாப்
பிறப்பும் புக்கனவோ!
வினியே வந்த வினைபரியு
மியல்பொன்
றிலையோ காணென்றான். |
|