பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 251

''கனியே உண்டு வந்த வினை கண்ணிக் கற்றோர் ஓதிய நூல்
நனியே உணரா, பொய் கலந்தே, நல் நீர் கடலுள் கலந்தது போல்,
நுனியே தளிர்ப்பத் தலைவிதியும் தொலையாப் பிறப்பும் புக்கனவோ!
இனியே வந்த வினை பரியும் இயல்பு ஒன்று இலையோ? காண''
                                        என்றான்.


     ''விலக்கப்பட்ட கனியை உண்டதனால் வந்த பாவ வினையைக்
கருதிக் கற்றோர் எழுதிய நூற் பொருளை நன்கு உணராமல், நல்ல நீர்
உப்புக் கடலுள் கலந்ததுபோல் பொய்யோடு கலந்து, துன்பமே வளருமாறு
தலைவிதிக் கொள்கையும் நீங்காத மறுபிறப்புக் கொள்கையும் புகுந்தனவோ!
இதோ பார்; இனி, அவ்வாறு வந்து சேர்ந்த பழவினையை அறுத்தெரியும்
தன்மை ஒன்றுமே இல்லையோ? என்று சிவாசிவன் வினாத் தொடுத்தான்.

     'புக்கனவோ' என்றவிடத்து ஓகாரம், அதனை அறிந்தமை பற்றி
வியப்பும், இதுவரை அறியாதிருந்தது பற்றிக் கழிவிரக்கமும் குறிக்கும்.

 
                    125
விரைசெய் கொடியோன் விழாவணியின்
     விரும்பி நோக்கி மீண்டுய்யப்
புரைசெய் வினையெம் மாலாற்றா
     பொதிரன் பாற்றா வருட்கடவுள்
மரைசெய் யுடற்கொண்ட டவதரித்தெம்
     வடுத்தீர்த் துயர்வீட் டெமையுய்ப்பக்
கரைசெய் கடன்மிக் கிடர்கொண்டு
     காப்பா னென்று மறையென்றான்,
 
விரை செய் கொடியோன் விழா அணியின் விரும்பி நோக்கி,
                         ''மீண்டு உய்யப்
புரை செய் வினை எம்மால் ஆற்றா. பொதிர் அன்பு ஆற்றா
                         அருட் கடவுள்
மறை செய் உடல் கொண்டு அவதரித்து, எம் வடுத் தீர்த்து
                         உயர் வீட்டு எமை உய்ப்ப,
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும்
                         மறை'' என்றான்.