பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 252

     மணம் பரப்பும் மலர்க் கொடியை உடையவனாகிய சூசை திருவிழா
அழகைக் காண்பவன் போல் சிவாசிவனை விருப்பத்தோடு நோக்கி,
''பாவத்தைப் புகுத்திய அப்பழ வினையினின்று மீண்டு உய்தி பெற எம்
போன்ற மனிதர் முயற்சியால் இயலாது. அதனால், அருளுள்ள கடவுள்
மிகுந்த அன்பு காட்டித் தானே தாமரை மலர் போன்ற உடலெடுத்து
அவதரித்து, நம் பாவத்தைப் போக்கி உயர்ந்த வான் வீட்டில் நம்மைக்
கொண்டு சேர்க்கும் பொருட்டு, கரையுள்ள கடலைக் காட்டிலும் மிகுதியான
துன்பங்களைத் தானே அனுபவித்து மீட்டுக் காப்பானென்று வேதம்
சொல்லும்'' என்றான்.

     எம்மால் ஆற்றா - 'எம்மால் ஆற்றாது' என்ற தொடர் இறுதி
குறைந்து நின்றது. அன்பு ஆற்றா - 'அன்பு ஆற்றி' எனச் 'செய்யா' என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சம் உடன்பாட்டுப் பொருளில் வந்தது. மரை -
தாமரை என்ற சொல்லின் முதற் குறை.

 
               126
எந்நாட் டெந்நா ளெக்குலத்தே
     யிறையோன் பிறப்பா னெனவன்னா
னந்நாட் டொளிப்பத் திருவுளமென்
     றறிந்த சூசை மறைநூலோர்
முன்னாட் சொன்ன நிலைநோக்கின்
     முகைத்த வென்னாட் டென்குலத்தே
யிந்நாட் கடவுள் மகனானா
     னென்ப துரிய வியல்பென்றான்.
 

''எந் நாட்டு, எந் நாள், எக் குலத்தே இறையோன் பிறப்பான்?''
                                   என, அன்னான்
அந் நாட்டு ஒளிப்பத் திருவுளம் என்று அறிந்த சூசை, ''மறை
                                   நூலோர்
முன் நாள் சொன்ன நிலை நோக்கின், முகைத்த என் நாட்டு,
                                   என் குலத்தே,
இந் நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு''
                                   என்றான்.


     ''இறைவன் எந்த நாட்டில், எந்த நாளில், எந்தக் குலத்தில்
பிறப்பான்?'' என்று சிவாசிவன் வினாவினான். பிறந்த இறைவன் அந்த
எசித்து நாட்டில் ஒளிந்திருக்கத் திருவுளங் கொண்டானென்று அறிந்திருந்த
சூசை, அது வெளிப்படாவண்ணம், ''வேத நூலோர் முன் நாளில்
சொல்லியுள்ள நிலையை