|
ஆராய்ந்து பார்த்தால்,
மலர் நிறைந்த என் நாட்டில், என் குலத்தில், இந்
நாளில் கடவுள் மனிதனாய் அவதரித்தான் என்று கொள்வதே உரிய
தன்மை'' என்றான்.
| 127 |
பருதி முன்னி
யிரவஃகப்
பருவ
மின்றி வனம்பூப்ப
விருதி நாக்கா யோர்நவமீ
னிலங்க
விறையோ னடிவீழ்ச்சி
கருதி யரசர் மூவருறக்
காட்சி
யமுதர் கண்டுவப்பச்
சுருதி நாதன் பிறந்ததெனத்
துணிவிற்
றெளிந்தார் சிலரென்றான். |
| |
''பருதி முன்ணி
இரவு அஃக, பருவம் இன்றி வனம் பூப்ப,
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன்
அடிவீழ்ச்சி
கருதி அரசர் மூவர் உற, காட்சி அமுதர் கண்டு உவப்பச்
சுருதி நாதன் பிறந்தது எனத் துணிவின் தெளிந்தார் சிலர்''
என்றான்'
|
சூசை
மேலும் தொடர்ந்து, ''ஒரு நாள் பகலவன் முற்பட உதித்து
இரவு குறைந்தது. பூக்கும் பருவம் இல்லாதிருந்தும் காடு பூத்து நின்றது.
நூலை உரைக்கும் நாவு போல ஒரு புதிய விண்மீன் தோன்றியது. அதனைக்
கண்டு, பிறந்த ஆண்டவனின் அடியில் விழுந்து வணங்கக் கருதி அரசர்
மூவர் வந்தனர். இடையர் காட்சி கண்டு மகிழ்ந்தனர். இவற்றைக் கொண்டு,
வேத நாதன் மனிதனாய்ப் பிறந்தது உண்மையென்று துணிந்து தெளிந்தவரும்
சிலர் உண்டு'' என்றான்.
இருடி
என்பது எதுகை நோக்கி இருதி என வந்தது; இருடி -
முனிவர்.அமுது - பால். அதனை வழங்குவோர் அமுதர் : இடையர்.
| 128 |
கானார் கொடிமேற்
பூவனைய
கரத்திற்
பொலிந்த திருமகனு
மானா வுறுதி மனத்துரைப்ப
மருடீர்ந்
தன்னான் றெளிந்துவப்பத் |
|