தேனா ரிந்நா
டிறைஞ்சிய பொய்த்
தேவ
ரொளித்த திறங்கண்டே
னீனா ரெழவான் வேந்துதீத்தா
னென்ன
வுளத்திற் றேறுகின்றான். |
| |
கான் ஆர் கொடி
மேல் பூ அனைய கரத்தில் பொலிந்த திரு மகனும்
மானா உறுதி மனத்து உரைப்ப, மருள் தீர்ந்து அன்னான் தெளிந்து
உவப்ப,
'தேன் ஆர் இந் நாடு இறைஞ்சிய பொய்த் தேவர் ஒளித்த திறம்
கண்டேன்
ஈனார் எழ வான் வேந்து உதித்தான்' என்ன உளத்தில் தேறுகின்றான். |
மணம்
நிறைந்த மலர்க் கொடியிலுள்ள பூவைப் போன்று சூசையின்
கையில் பொலிவுடன் விளங்கிய திருமைந்தனும் நிகரில்லாத உறுதிக்
கருத்துக்களைச் சிவாசிவனின் மனத்துள் உரைத்தான். அதனால் அவன்
மன மயக்கம் தீர்ந்து தெளிந்து மகிழ்ந்து, 'தேன் நிறைந்த இந்த எசித்து
நாடு வணங்கிய பொய்த் தேவர்கள் ஒளித்துப் போன தன்மையை ஒரு
நாள் கண்டேன். எனவே, ஈன மனிதர் எழுச்சி பெறுமாறு வான
மன்னனாகிய ஆண்டவன் மனிதனாகப் பிறந்துள்ளான்' என்று தன்
உள்ளத்தில் தெளிவு பெறுகின்றான்.
பொய்த்
தேவர் ஒளித்தது : சோகு தோர்வைப் படலம் 56 - 68
காண்க.
சிவாசிவன்
மனமாற்றம்
-
மா, தேமா, கூவிளம், தேமா, தேமா, கூவிளம்
| 129 |
இற்றெ லாமி
யம்பினா னிக்கு லாம்ப தாகையான்
மற்றெ லாம னத்துளாய் வான நாத னோதலா
னுற்றெ லாஞ்சி வாசிவ னோங்கி யோங்கு ஞானமுட்
பெற்றெ லாம்வெ றுத்தனன் பீலி பெற்ற பாணியான் |
|