இற்று எலாம்
இயம்பினான் இக்கு உலாம் பதாகையான்.
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான்
உற்று எலாம் சிவாசிவன் ஓங்கி ஓங்கு ஞானம் உள்
பெற்று எலாம் வெறுத்தனன் பீலி பெற்ற பாணியான். |
தேன்
பொருந்திய மலர்க் கொடியை உடையவனாகிய சூசை மேலே
காட்டியவாறு, இதுவெல்லாம் எடுத்துச் சொன்னான். மற்ற எல்லாவற்றையும்
குழந்தையாகிய வானநாதன் தன் மனத்துள்ளாய் ஓதி உணர்த்துதலால்,
சிவாசிவன் எல்லாம் உணரலுற்றான். அதனால் எழுச்சி பெற்று, உயர்ந்த
ஞானத்தைத் தன் உள்ளத்தில் பெற்று, மயிற் பீலியைத் தாங்கிய கையை
உடையவனாகிய அவன், தன் பழைய கோலம் முதலிய எல்லாவற்றையும் வெறுத்தான்.
| 130 |
கரம ணிந்த
சூலவேல் காத ணிந்த குண்டல
முரம ணிந்த வக்கணி யுள்ள ணிந்த மாசொடுஞ்
சிரம ணிந்த கொக்கிறை தீதணிந்த கோலமாய்ப்
புரம ணிந்த மற்றெலாம் போட்டு தைத்தி ரட்டினான். |
| |
கரம் அணிந்த
சூலவேல், காது அணிந்த குண்டலம்,
உரம் அணிந்த அக்கு அணி, உள் அணிந்த மாசொடும்
சிரம் அணிந்த கொக்கு இறை தீது அணிந்த கோலமாய்ப்
புரம் அணிந்த மற்று எலாம் போட்டு உதைத்து இரட்டினான்: |
கையில்
தாங்கியிருந்த திரிசூல வேலையும், காதில் அணிந்திருந்த
தொக்கணியாகிய குண்டலத்தையும், மார்பில் அணிந்திருந்த சங்கு மணி
மாலையையும், தன் உள்ளத்தில் கொண்டிருந்த மாசோடும் சேர்த்து,
தலையில் அணிந்திருந்த கொக்கு இறகையும் தீமையை அணிந்த
கோலமாய்க் கருதி, உடம்பில் அணிந்திருந்த மற்றக் கோலங்களையும்
கலைத்துத் தரையில் போட்டுக் காலால் உதைத்து, பின்வருமாறு
முழங்கினான்:
| 131 |
உற்ற கோலம்
வீணடா வொண்ட வங்கள் வீணடா
கற்ற நூலும் வீணடா கையு தாரம் வீணடா
பெற்ற பேறும் வீணடா பேர றங்கள் வீணடா
மற்ற யாவும் வீணடா மண்ணை போற்ற லாலடா. |
|