''உற்ற கோலம்
வீண், அடா! ஒண் தவங்கள் வீண், அடா!
கற்ற நூலும் வீண், அடா! கை உதாரம் வீண், அடா!
பெற்ற பேறும் வீண் அடா! பேர் அறங்கள் வீண், அடா!
மற்ற யாவும் வீண், அடா மண்ணை போற்றலால், அடா? |
''கொண்ட
கோலமும், ஒள்ளிய தவங்களும், கற்ற நூலறிவும், கையால்
தந்த கொடையும், பெற்ற செல்வங்களும், பெரிய அறங்களும், மற்ற யாவுமே
பேயை வணங்குதலால் வீணே, அடா!
| 132 |
ஆதி யீறி
ரண்டிலோ யாசி லோய மைந்தமுப்
போதி லோயு றுப்பிலோய் பொற்பெ லாம ணிந்துளோய்
கோதி லோயெ திர்ப்பிலோய் கோவ ணங்கு மொன்றுளோய்
நீதி யாதி நீர்ரெலா நீர்த்த ணிந்த நாதனே. |
| |
''ஆதி ஈறு இரண்டு
இலோய், ஆசு இலோய் அமைந்த முப்
போது இலோய், உறுப்பு இலோய், பொற்பு எலாம் அணிந்து
உளோய்,
கோது இலோய், எதிர்ப்பு இலோய், கோ வணங்கும் ஒன்று
உளோய்,
நீதி ஆதி நீர் எலாம் நீர்த்து அணிந்த நாதனே! |
''தொடக்கம்
முடிவு என்ற இரண்டும் இல்லாதவனே, மாசு
இல்லாதவனே, இறப்பு நிகழ்வு எதிர்வு என்று அமைந்த முக்காலமும்
இல்லாதவனே, உடலுக்குரிய உறுப்பு இல்லாதவனே, அழகெல்லாம்
அணிந்துள்ளவனே, குற்றம் இல்லாதவனே, நிகர் இல்லாதவனே, வானுளோர்
வணங்கும் ஒப்பற்ற பொருளாய் உள்ளவனே, நீதி முதலிய தெய்வத்
தன்மையெல்லாம் இயல்பாகக் கொண்டு அணிந்த நாதனே!
| 133 |
இங்கு மங்கு
மெங்குமொன் றென்று நின்றொ ருங்குளோய்
தங்கு கின்ற வென்குறை தாங்கி நீங்கி வீடிட
வங்க மொன்றி யுற்றியே யங்கு றாது நானிவண்
பொங்குகின்ற வின்பொடுன் பூம்ப தங்கள் போற்றினேன் |
|