பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 257

''இங்கும் அங்கும் எங்கும் ஒன்று என்று நின்று ஒருங்கு உளோய்,
தங்குகின்ற என் குறை தாங்கி நீங்கி வீடு இட அங்கம் ஒன்றி உற்றியே;
அங்கு உறாது, நான் இவண் பொங்குகின்ற இன்பொடு உன்பூம் மதங்கள்
                                         போற்னேன்.
''இங்கும் அங்கும் எங்கும் ஒரே பொருளாய் நின்று எங்கும் நிறைவாய்
                                         உள்ளவனே,


     தங்குகின்ற என் குற்றங்களை நீயேதாங்கி, அவை நீங்கச் செய்து
என்னை வான்வீட்டில் செலுத்தும்படி உடலுக்குள் ஒன்றி
வந்திருக்கின்றாயாமே; அங்கு வர இயலாமையால், நான் இங்கிருந்து
கொண்டே பொங்குகின்ற இன்பத்தோடு உன் மலரடிகளை வணங்கினேன்.

     அங்கம் - உறுப்பு அது ஆகு பெயராய் உடலைக் குறித்தது.

 
                   134
தீய ளித்த காமுறீஇத் தீத மிழ்ந்தி மூழ்கியான்
பேய ளித்த மாலிருட் பெற்ற றாச்செ ருக்குறீஇத்
தாய ளித்த வன்பினுஞ் சாற்ற ருந்த யாபரா
நீய ளித்த கைக்கொடு நீச ரைக்கு ரங்கினேன்.
 
''தீ அளித்த காம் உறீஇத் தீது அமிழ்ந்தி மூழ்கி, யான்
பேய் அளித்த மால் இருள் பெற்று, அறாச் செருக்கு உறீஇ,
தாய் அளித்த அன்பினும் சாற்ற அரும் தயாபரா,
நீ அளித்த கைக் கொடு நீசரைக் குரங்கினேன்.

     ''தாய் தந்த அன்பிற்கு மேலும் சொல்லுதற்கு அரிய தயவுள்ள
ஆண்டவனே, வெப்பத்தைத் தந்த காமம் கொண்டு தீமையில் அமிழ்ந்தி
மூழ்கி, பேய் தந்த மயக்கம் கொண்ட இருளைப் பெற்று, ஆறாத
அகந்தைக்கு ஆளாகி, நீயே தந்த கையைக் கொண்டு நீசப் பேய்களை
வணங்கினேன்.

     காம் - காமம் என்ற சொல்லின் இடைக்குறை, சாற்றரும் - சாற்ற +
அரும் : தொகுத்தல் விகாரம்.

 
                    135
கோவில் வீற்றி ருந்தநீ கோது கொள்ளெ னைக்கொள
மேவி வீற்றி ருந்தியான் வீட்டில் வாழ மைந்தனாய்ப்
பூவில் வீற்றி ருந்திரா பொங்க ரந்தை பூண்டியோ
நாவில் வீற்றி ருந்தநூ றடி வாழ்த்த வன்பிதோ.