''கோவில் வீற்றிருந்த
நீ கோது கொள் எனைக் கொள
மேவி, வீற்றிருந்து யான் வீட்டில் வாழ மைந்தன் ஆய்,
பூவில் வீற்றிருந்து இரா, பொங்கு அரந்தை பூண்டியோ!
நாவில் வீற்றிருந்த நூல் நாடி வாழ்த்த அன்பு இதோ. |
''வானுலகில்
அரசனாய் வீற்றிருந்த நீ, பாவமே கொண்டுள்ள என்னை
மீட்டுக் கொள்ள விரும்பி, நான் வான்வீட்டில் அரசனாய் வீற்றிருந்து
வாழுமாறு நீயே மனித அவதாரங்கொண்டு வந்து, இம் மண்ணுலகில்
வீற்றிருந்து அரசு பூண்டு இராமல், பெருகுகின்ற துன்பங்களையே
அணியாகப் பூண்டுகொண்டாயோ! புலவர் நாவில் வீற்றிருந்த நூல்களில்
ஏற்ற சொற்களைத் தேடிக் கண்டு வாழ்த்தத்தக்க உன் அன்பு
இத்தகையதோ!
| 136 |
ஆசெ
னும்பெ ருங்கட லாழ்ந்து நீந்தி யேறினேன்
றேசெ னும்பெ ருங்கதிர் செய்தெ றித்த சோதியோய்
மாசெ னும்பெ ருங்கறை மாறி னாயெ னாநினைத்
தாசெ னும்பெ ரும்பெயர் தாங்கி வாழ்த்து வேனென்றான். |
| |
''ஆசு எனும் பெருங்
கடல் ஆழ்ந்து நீந்தி ஏறினேன்.
தேசு எனும் பெருங் கதிர் செய்து எறித்த சோதியோய்,
மாசு எனும் பெருங் கறை மாறினாய் எனா, நினைத்
தாசு எனும் பெரும் பெயர் தாங்கி வாழ்த்துவேன்'' என்றான். |
''ஒளி
என்னும் பெருங் கதிரை வீசி என் உள்ளத்தை விளங்கச்
செய்த ஒளிமயமானவனே, பாவம் என்னும் பெருங்கடலில் நான் மூழ்கிக்
கிடந்து, உன் அருளால் அதனை நீந்திக் கரை ஏறினேன். பாவ மாசு
என்னும் பெருங் கறையை நீயே மாற்றினாய் என்று தெரிந்து, உன் தாசன்
என்னும் பெருமையுள்ள பெயரைத் தாங்கி நின்று, உன்னையே
வாழ்த்துவேன்'' என்று சிவாசிவன் துதி முடித்தான்.
|