பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 259

                   தெளிந்தோர் வாழ்த்து

     - மா, கூவிளம், கூவிளம்

 
                 137
தானு யிர்த்தத வத்தினாற்
கானு யிர்த்தகொ டிக்கையா
னூனு யிர்த்தவு ருப்பிரான்
மானு யிர்த்தருள் வாழ்த்தினான்.
 
நான் உயிர்த்த தவத்தினால்
கான் உயிர்த்த கொடிக் கையான்
ஊன் உயிர்த்த உருப் பிரான்
மான் உயிர்த்த அருள் வாழ்த்தினான்.

     தான் செய்த தவத்தின் பெருமையால் மணம் பரப்பிய மலர்க்
கொடியைக் கையில் தாங்கிய சூசை, ஊனோடு கூடிய உருவத்தைக்
கொண்ட ஆண்டவன் தன் தெய்வ இயல்பிற்கு ஒத்தவாறு சிவாசிவன் மீது
பொழிந்த அருளை வாழ்த்தினான்.

     மான் - மான : போல. உயிர்த்தருள் - உயிர்த்த + அருள்;
தொகுத்தல் விகாரம்.

 
                  138
தூக்கி னான்விழி தூவுநீர்
வீக்கி னானிறை மார்புற
வீக்கி னான்விளை யார்வமாய்
நோக்கி னான்மறை நூலினான்.
 
தூக்கினான்; விழி தூவும் நீர்
நீக்கினான்; நிறை மார்பு உற
வீக்கினான்; விளை ஆர்வமாய்
நோக்கினான் மறை நூலினான்.

     வேத நூல் அறிந்த சூசை சிவாசிவனைத் தூக்கினான்; அவன் கண்கள்
தூவிய நீரைத் துடைத்தான்; அருள் நிறைந்த தன் மார்போடு அணையக்
கட்டித் தழுவினான்; விளைந்த ஆர்வத்தோடு அவனை நோக்கினான்.