| 139 |
உருவொ ளித்துறை
நாயகன்
மருவொ ளித்தம லர்க்கணாற்
றிருவொ ளித்ததெ ருட்கொடு
பொருவொ ளித்தருள் போக்கினான். |
உரு ஒளித்து உறை
நாயகன்
மரு ஒளித்த மலர்க் கணால்
திரு ஒளித்த தெருள் கொடு
பொருவு ஒளித்து அருள் போக்கினான். |
உடல்
உருவத்துள் ஒளித்துத் தங்கிய ஆண்டவன் தன் தெய்வ
மணத்தை மறைத்துக் கொண்டிருந்த மலர் போன்ற கண்களால் எல்லாச்
செல்வமும் உள்ளே மறைந்து கிடக்கின்ற ஞானத் தெளிவின் மூலமாக
ஒப்பிட எப்பொருளும் இல்லாது ஒளித்துக் கொள்ளத்தக்க அருளைச்
செலுத்தினான்.
| 140 |
திறங்கொ
ளீஇத்தெரு டாசனுட்
பிறங்கொ ளீடுறு பெற்றியாற்
புறங்கொ ளீஇப்பொதிர் யாவரு
அறங்கொ ளீஇத்தொளி வாயினார். |
| |
திறம் கொளீஇத்
தெருள் தாசன் உள்
பிறங்கு ஒள் ஈடு உறு பெற்றியால்,
புறம் கொளீஇப் பொதிர் யாவரும்
அறம் கொளீஇத் தெளிவு ஆயினார். |
ஆண்டவன்
அருள் திறம் கொண்டு தெளிந்த தாசனாகிய சிவாசிவன்
உள்ளத்தில் விளங்கிய ஒளியில் ஈடுபாடு கொண்ட தன்மையினால், புறத்தே
சூழ்ந்து திரண்டு நின்ற யாவரும் அறத்தைக் கைக்கொண்டு தெளிவு
கொண்டனர். 'கொண்டு' என்பது 'கொளீஇ' என்று திரிந்து சொல்லிசை
அளபெடை ஆயிற்று.
|