| 141 |
கனைவ ருங்கன
மின்னென
வினைவ ரும்பொருள் மேவிலார்
புனைவ ரும்புகழ் வேதநூ
லனைவ ருந்துதி யாடினார். |
| |
கனை வரும் கன
மின் என
வினை வரும் பொருள் மேவு இலார்
புனைவு அரும் புகழ் வேத நூல்
அனைவரும் துதி ஆடினார்: |
முழங்கி
வரும் மேகத்தில் தோன்றும் மின்னல்போல் மறைவதும்
பாவ வினையைக் கொணர்வதுமான பொருட்செல்வத்தை விரும்பாதவராய்,
புனைந்து கூறுவதற்கு அரிய புகழ் கொண்ட வேத நூலை யாவரும்
துதித்துப் பேசினர்:
| 142 |
நஞ்சி னோடுறு
நல்லமிர்
தெஞ்சி நோயிட மாய்த்தெனத்
துஞ்சி னார்துணி வோடுபொய்
விஞ்சி வேதநஞ் சாயதே. |
| |
''நஞ்சினோடு
உறு நல் அமிர்து
எஞ்சி நோய் இட மாய்த்து என,
துஞ்சினார் துணிவோடு பொய்
விஞ்சி, வேதம் நஞ்சு ஆயதே. |
''நஞ்சோடு
சேர்ந்த நல்ல அமிழ்தம் தன் தன்மை குன்றி நோய் தந்து
மாய்ப்பது போல, தூங்கிக் கனவு கண்டு விழித்தவர் உண்மையென்ற
துணிவோடு கூறிய பொய் மிஞ்சிக் கலந்து, வேதமும் நஞ்சாக மாறிவிட்டது.
| 143 |
மெய்வ கைப்பொருள்
வீக்கிய
பொய்வ கைப்பொருள் பேர்த்தில
மைவ கைப்பொருள் மண்டுள
முய்வ கைப்பொரு ளொன்றிலா. |
|