பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 262

''மெய் வகைப் பொருள் வீக்கிய
பொய் வகைப் பொருள் பேர்த்து இல,
மை வகைப் பொருள் மண்டு உளம்
உய் வகைப் பொருள் ஒன்று இலா.


     ''அத்தகைய பொய் வேதத்தில் மெய்யின் வகைப்பட்ட பொருளோடு
சேர்த்துக் கட்டிய பொய்யின் வகைப்பட்ட பொருளைப் பெயர்த்து
எறியாமல், இருளின் வகைப்பட்ட அப்பொருள் மண்டிக் கிடக்கும் உள்ளம்
உய்வதற்கான வகையைச் சேர்ந்த பொருள் ஒன்றுமே இல்லை.

 
               144
இருள டர்ந்தவி ராவறத்
தெருள டர்ந்தொளி சென்றென
வருள டர்ந்திவ னோதியான்
மருள டர்ந்தபொய் மாய்ந்ததே.
 
''இருள் அடர்ந்த இரா அறத்
தெருள் அடர்ந்து ஒளி சென்று என,
அருள் அடர்ந்த இவன் ஓதியால்
மருள் அடர்ந்த பொய் மாய்ந்ததே!''

     ''இருள் அடர்ந்த இரவு நீங்குமாறு தெளிவு திரண்டு பகலவனின் ஒளி
சென்றது போல், அருள் திரண்ட இச்சூசையின் அறிவுரையால் மயக்கம்
திரண்ட பொய் மாய்ந்ததே!'' என்று வியந்து துதியை முடித்தனர்.

     அடர்ந்திவன் - அடர்ந்த + இவன் : தொகுத்தல் விகாரம்.

                   பல தெய்வ வணக்கம்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
          145
பேர்நல மணிக்குன் றுச்சிப்
     பெருவிளக் கிட்ட தேபோற்
சீர்நலம் பொலிமூ தூரிற்
     சிவாசிவன் விளங்கித் தோன்றக்