கூர்நலந்
தெளிந்த காட்சி
கொளீ
இச்சிலர் குளிர்ப்பத் தேறி
யார்நலம் புதைத்த மெய்ந்நூ
லருச்
சனை கொண்ட தன்றே |
| |
பேர் நல மணிக்
குன்று உச்சிப் பெரு விளக்கு இட்டதே போல்,
சீர் நலம் பொலி மூதூரில் சிவாசிவன் விளங்கித் தோன்ற,
கூர்நலம் தெளிந்த காட்சி கொளீஇச் சிலர் குளிர்ப்பத் தேறி,
ஆர் நலம் புதைத்த மெய்ந் நூல் அருச்சனை கொண்டது அன்றே. |
பேரழகு,
வாய்ந்த மாணிக்கக் குன்றின் உச்சியில் பெரிய விளக்கை
ஏற்றி வைத்தது போல், செல்வ நலம் பொலிந்த இரவிமாபுரம் என்னும்
பழமை வாய்ந்த ஊரில் சிவாசிவன் வேத விளக்காய் விளங்கித்
தோன்றினான். அது கண்டு, சிலர் மிக்க நலத்தால் தெளிந்த அறிவு பெற்று
மனம் குளிர வேதமே மெய்யென்று தேறினர். அவனால், நிறைந்த
நலமெல்லாம் புதைந்து கிடக்கின்ற மெய்யான வேத நூல் அங்கு வணக்கம்
பெற்றது.
'கொண்டு'
கொளீஇ எனத் திரிந்து சொல்லிசை அளபெடை ஆயிற்று.
| 146 |
குவிமதத்
தயிர்ப்பிற் கற்றோர்
குழாங்குழா
நகரத் தெங்குங்
கவிமதத் தெழுந்த வந்நூற்
கடக்கிலா
தலைய வோர்நாள்
சவிமதத் தலர்ந்த சோலைத்
தடத்துறும்
வளனைக் கண்டு
செவிமதத் தீஞ்சொல் வெஃகிச்
செல்கவீங்
கடிக ளென்றார். |
| |
குவி மதத்து அயிர்ப்பில்,
கற்றோர் குழாம் குழாம் நகரத்து எங்கும்,
கவி மதத்து எழுந்த அந்நூல் கடக்கிலாது, அலைய, ஓர நாள்
சவி மதத்து அலர்ந்த சோலைத் தடத்து உறும் வளனைக் கண்டு,
செவி மதத் தீம் சொல் வெஃகி, ''செல்க ஈங்கு, அடிகள்!'' என்றார். |
|