"வையகத்து ஒருவனாய்
வாய்ந்த முத்தொழில்
செய் அகத்து இணை இலான் சிறந்த அன்பொடு
பொய் அகத்து உறும் செயிர் போக்க மைந்தனாய்
மெய் அகத்து உறும் திறன் மறையின் மெய்மையே |
"இவ்வையகத்திற்குத்
தான் ஒருவனே முதல்வனாய் நின்று, படைத்தல்
காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலும் ஆற்றுவதில் தனக்கு
ஒப்பற்றவனாகிய கடவுள் பொய்யின் அடிப்படையில் வந்து சேர்ந்த
பாவத்தைப் போக்குமாறு சிறந்த அன்போடு மனிதனாய் உடலெடுத்து வரும்
இயல்பு வேதங் கூறும் உண்மைப் பொருள் ஆகும்.
பொய்
அகத்து உறும் செயிர் - சாத்தான் கூறிய பொய்யை ஏற்று
ஏவாளும் ஆதாமும் விலக்கப்பட்ட கனியை உண்டதனால் விளைந்த பாவ
வினை (ஆதி. 3)
| 44 |
ஊன்முகத்
துதித்தபோ துலகின் றீதிரு
ணான்முகத் தொழிப்பனென் றுதிக்கு நாடனில்
வான்முகத் துடுநவம் வழங்கு மென்றுமெய்
நூன்முகத் தெழுமறை நுவல்வ தாய்ந்துளாய். |
| |
"ஊன் முகத்து
உதித்த போது உலகின் தீது இருள்
நால் முகத்து ஒழிப்பன் என்று, உதிக்கும் நாள்தனில்
வான் முகத்து உடு நவம் வழங்கும் என்று, மெய்
நூல் முகத்து எழு மறை நுவல்வது ஆய்ந்துளாய். |
"அக்கடவுள்
ஊனுடல் எடுத்துப் பிறந்தபோது உலகத்தின் பாவ
இருள் நான்கு திசையிலும் ஒழிப்பான் என்றும், அவன் அவ்வாறு உதிக்கும்
நாளில் வானத்திற் புதிய விண்மீன் ஒன்று தோன்றும் என்றும், மெய் நூலின்
அடிப்படையில் எழுந்துள்ள வேதம் கூறுவதை நீயும் ஆராய்ந்து அறிந்துள்ளாய்.
'உடு
நவம்' என்பதனை 'நவ உடு' என மாற்றுக.
|