| 45 |
அக்கணங்
காண்டலு மரசர் மூவர்வந்
திக்கணங் காட்டிய யூதர் மன்னவ
னெக்கணங் கவன்பிறந் தியைந்து ளானென
மிக்கணங் கலங்கலோய் வினவக் கேட்டியால். |
| |
"அக் கணம் காண்டலும்
அரசர் மூவர் வந்து,
'இக் கணம் காட்டிய யூதர் மன்னவன்
எக் கண் அங்கு அவன் பிறந்து இயைந்துளான்?' என,
மிக்க அணங்கு அலங்கலோய், வினவக் கேட்டியால |
"மிக்க
அழகுள்ள மாலையை அணிந்தவனே, அவ் விண்மீனைக்
கண்டதும் மூவரசர் இங்கு வந்து, 'இவ்விண்மீன் காட்டிய யூதர் மன்னனாகிய
அவன் எவ்விடத்திற் பிறந்து தங்கியுள்ளான்?' என வினவ, நீயே கேட்டாய்.
அங்கு
- ஆங்ஙனம் என்பதன் குறுக்கம். முன் 44ஆம் பாடலிற்
கூறியவாறு. 'மிக்கவணங்கு' என்பதன் தொகுத்தல் விகாரமாக வினவக்
கேட்டது: மத், 2 : 1 - 2. 'மிக்கணங்கு' என நின்றது.
| 46 |
மீட்சியுங்
கோவலர் வியப்பக் கண்டதோர்
காட்சியுங் கடும்வினை கடிந்த சீமையோன்
சாட்சியும் புகழ்ச்சியும் மற்றச் சால்புறு
மாட்சியும் பெருமையும் வழங்கக் கேட்டியால். |
| |
"மீட்சியும்,
கோவலர் வியப்பக் கண்டதுஓர்
காட்சியும், கடும் வினை கடிந்த சீமையோன்
சாட்சியும் புகழ்ச்சியும் மற்றச் சால்பு உறு
மாட்சியும் பெருமையும் வழங்கக் கேட்டியால். |
'மேலும்,
இடையர் வியப்போடு போய் அக் குழந்தையை நேரிற்
கண்ட காட்சியும், தீச் செயல் விலக்கிய சீமையோன் என்ற குரு கூறிய
சாட்சியும் புகழ்ச்சியும், மற்றும் அக் குழந்தையைப் பற்றிய மேன்மை
பொருந்திய மாண்பும் பெருமையும் இந்நாடெங்கும் வழங்குதலையும் கேட்டு
அறிந்துள்ளாய்.
மீட்சி
- இங்கு 'மீளவும்' என்ற கருத்தில் நின்றது. கோவலர்கண்ட
காட்சி : லூக். 1 : 8 - 18. சீமையோன் சாட்சி : லூக், 2 : 22 - 35.
|