பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 265

                 148
உய்வகை யின்றி மற்றோ
     ருழியடுத் துய்வா ரென்று
பொய்வகை முறுவல் காட்டிப்
     புகன்றனன் சூசை யையம்
மொய்வகை யருளிக் கேண்மோ
     முதிர்தவத் திறைவ வென்று
மெய்வகை யுணர்வு நாடி
     வினாதத்தன் சொன்னான் மீண்டே.
 
''உய் வகை இன்றி, மற்று ஓர் உழி அடுத்து உய்வார்!'' என்று
பொய் வகை முறுவல் காட்டிப் புகன்றனன் சூசை. ''ஐயம்
மொய் வகை அருளிக் கேள்மோ, முதிர் தவத்து இறைவ!'' என்று
மெய் வகை உணர்வு நாடி வினாதத்தன் சொன்னான் மீண்டே :

     சூசை பொய்யான சிரிப்புக் காட்டி, ''இங்கு உயிர் பிழைப்பதற்கு
வகையற்றுப் போய், வேறு ஓர் இடத்தை அடுத்து உயிர் உய்வார் போலும்!''
என்று கூறினான். வினாதத்தன் என்ற ஒருவன், உண்மையை உள்ளவாறு
உணர்தலை விரும்பி, ''முதிர்ந்த தவத் தலைவனே, ஐயம் மனத்தில் நிறைந்த
வகையை அருள் கூர்ந்து கேள்'' என்று தொடங்கி, மீண்டும் பின்வருமாறு
சொன்னான்:

     கேண்மோ - 'மோ' முன்னிலையசை.

 
            149
எல்லையிற் றுயர்ந்தோர் நாத
     னிவண்வர மற்றத் தேவ
ரொல்லையிற் றளர்ந்த வண்ணத்
     தொருங்கொளித் தகலு மென்னத்
தொல்லையிற் பொறித்த வெந்நூல்
     சொன்னவா றிந்நா ளாகி
வல்லையிற் பொதிர்ந்த வையம்
     வளர்வினை யாயிற் றென்றான்.