பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 266

''எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண்வர, மற்றத் தேவர்
ஒல்லையில் தளர்ந்த வண்ணத்து ஒருங்கு ஒளித்து அகலும் என்ன,
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இந்நாள் ஆகி,
வல்லையில் பொதிர்ந்த ஐயம் வளர் வினை ஆயிற்று'' என்றான்.


     ''அளவிறந்து உயர்ந்த ஒப்பற்ற, ஆண்டவன் இங்கு வந்து சேரவே,
மற்றத் தேவரெல்லாம் விரைவில் தளர்ந்த வண்ணமாய் ஒருசேர ஒளித்து
நீங்குவரென்று, பழங்காலத்தில் எமது நூல் ஒன்று சொன்னபடி இந்நாளில்
நேர்ந்தமையால், மிகுந்த ஐயம் விரைவில் வளரலாயிற்று'' என்றான்
வினாதத்தன்;

     உயர்ந்தோர் - உயர்ந்த + ஓர்; தொகுத்தல் விகாரம். 'அகலும் எனச்
'செய்யும்' என்னும் முற்று பலர்பாலுக்கு வந்தது வழுவமைதியாகக் கொள்க.
'ஒல்லை' கால் விரைவையும், 'வல்லை' கால விரைவையும் குறிக்கும்.

 
          150
விஞ்சிய வயத்தொன் றாகி
     வென்றன கடவு டானோ
வஞ்சிய பலரோ வேண்டு
     மறைதியே யென்றான் சூசை
யெஞ்சிய வெமக்கே வேண்டு
     மிருவகை யென்ன முன்பான்
றுஞ்சிய கனவிற் சூட்சி
     சூசை கேட்டுரைத்தான் மீண்டே.
 

''விஞ்சிய வயத்து ஒன்று ஆகி வென்றன கடவுள் தானோ,
அஞ்சிய பலரோ வேண்டும்? அறைதியே'' என்றான் சூசை,
''எஞ்சிய எமக்கே வேண்டும் இரு வகை'' என்னமுன்பான்,
துஞ்சிய கனவின் சூட்சி சூசை கேட்டு உரைத்தான் மீண்டே :


     சூசை அவனை நோக்கி, ''மற்றத் தேவரையெல்லாம் மிஞ்சிய
வலிமையோடு தான் ஒருவனேயாகி வென்று நின்ற கடவுள் வேண்டுமோ?
அக்கடவுளுக்கு அஞ்சிய பல தேவர்கள் வேண்டுமோ? சொல்லுவாய்''