பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 267

என்றான். முன்னவன், ''மெலிந்த எமக்கு இரு வகையும் வேண்டும்''
என்றான்; சூசை தூங்கியவன் கண்ட கனவு போன்ற இந்த எண்ணத்தைக்
கேட்டு மீண்டும் சொல்லலானான்;

     வென்றன - வென்ற; பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை பெற்று
வந்தது.

 
            151
குலநல மெண்ணா வாய்ந்த
     குண நல முணரா காவ
லிலநலம் விற்கு மாத
     ரிழிப்படு நினைவீ தன்றோ
வலநலம் புணர்மெய்ந் நாதன்
     மரபுறா தொருவ னன்றிப்
பலநலம் பிரிந்த தேவர்ப்
     பணிதல்பே தைமையா மென்றான்.
 
''குல நலம் எண்ணா, வாய்ந்த குண நலம் உணரா, காவல்
இல நலம் விற்கும் மாதர் இழிப் படும் நினைவு ஈது அன்றோ?
வல நலம் புணர் மெய்ந் நாதன் மரபு உறாது, ஒருவன் அன்றி,
பல நலம் பிரிந்த தேவர்ப் பணிதல் பேதைமை ஆம்'' என்றான்.

     ''குல நலத்தைக் கருதாமலும், அமைந்த குண நலத்தை ஆராய்ந்து
உணராமலும், கற்பு என்னும் காவல் இல்லாமல் தம் அழகை யாருக்கும்
விற்கும் விலைமாதருக்கு உரிய இகழத்தக்க நினைவன்றோ இது? வலிமை
என்னும் நலம் பொருந்திய மெய்க் கடவுளின் இயல்பை ஆராய்ந்து
காணாமல், அவ்வொருவனை வணங்குதலேயன்றி, நலத்தின் தன்மையால்
வேறுபட்டுப் பிரிந்த பல தேவர்களை வணங்குதல் அறியாமை ஆகும்''
என்றான் சூசை.

 
          152
குருசிலர்க் கமைச்சர் வீரர்
     கொள்கையின் முதல்வற் சூழ்ந்து
வருசிலர் தேவ ரென்னில்
     வழுவதோ வென்ன வன்னான்
குருசிலர் நாமந் தானுங்
     கோவுரிப் பணிவுஞ் சூழ்ந்து
வருசிலர்க் கிட்ட காலை
     வழுவன்றோ வென்றான் சூசை.