| 154 |
அரும்பொரு
ளிருளிற் றேடி
யயர்வதென்
றேவ தன்மை
வரும்பொரு ளறியா தன்றோ
மருண்டசொல்
வளர்த்தி வேதந்
தரும்பொரு ளனைத்தும் வாய்ந்த
தவவிளக்
கெறிப்பக் கண்டோ
யரும்பொரு ளிறைமை சொல்லா
யென்றனன்
வசிட்ட னென்பான். |
| |
''அரும் பொருள்
இருளில் தேடி அயர்வது என்? தேவ தன்மை
வரும் பொருள் அறியாது அன்றோ மருண்ட சொல் வளர்த்தி?
வேதம்
தரும் பொருள் அனைத்தும் வாய்ந்த தவ விளக்கு எறிப்பக்
கண்டோய்,
அரும் பொருள் இறைமை சொல்லாய்'' என்றனன் வசிட்டன்
என்பான்.
|
வசிட்டன்
என்பவன் இருவர் பேச்சையும் கேட்டு, முதலில்
வினாதத்தனை நோக்கி, ''அரிய பொருளை இருளிலே தேடிச் சோர்வது
ஏன்? தெய்வத் தன்மை பொருந்திவரும் பொருள் எதுவென்று அறியாது
அல்லவா மயங்கிய சொல்லை வீணே வளர்த்துக் கொண்டிருந்தாய்?'' என்று
கூறி, பின் சூசையை நோக்கி, ''வேதம் உணர்த்தும் பொருள் அனைத்தும்
வாய்ப்பான தவம் என்னும் விளக்கு ஒளிர்வதனாற் கண்டு கொண்டவனே,
தெய்வத் தன்மை என்னும் அரிய பொருளை நீயே விளங்கச் சொல்வாய்''
என்று வேண்டினான்.
பின்,
''அரும் பொருள் இறைமை சொல்வாய்,'' எனவும், ''தவ விளக்கு
எறிப்பக் கண்டோய்,'' எனவும் கூறியவை சூசைக்கே பொருந்துவன
ஆதலின், முன் ''மருண்ட சொல் வளர்த்தி'' என்றது, பெயர் சுட்டாவிடினும்,
வினாதத்தனுக்கே பொருந்தும் என்க.
|