பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 272

''தன் வயத்து ஆதல், முதல் இலன் ஆதல், தரும் பொறி உரு
                                 இலன் ஆதல்,
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல், வயின் தொறும்
                                 வியாபகன் ஆதல்,
பின் வயத்து இன்றி ஒருங்கு உடன் அனைத்தும் பிறப்பித்த
                                 காரணன் ஆதல்
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்று மெய்
                                 இறைமையின் இயல்பே.


     ''தன் வயமாய்த் தான் உளன் ஆதல், தனக்குத் தொடக்கம்
இல்லாதவன் ஆதல், வெளிப்பட்டுத் தோன்றத் தகும் ஐம் பொறிகளோடு
கூடிய உருவம் இல்லாதவன் ஆதல், நிலைபெற்ற வலிமையோடு எல்லா
நலமும் தன்பால் உள்ளவன் ஆதல், இடந் தோறும் தான் பரந்து இருத்தல்
உடையவன் ஆதல், வேறு உதவியின்றி ஒரு சேர உடனே யாவற்றையும்
தோற்றுவித்த மூல காரணன் ஆதல் - இவை ஆறும் - பொன் மயமாய்
ஒளிர்கின்ற வானம் முதல் எல்லா உலகங்களும் போற்றத் தக்க மெய்யான
தெய்வத் தன்மையின் இயல்பு ஆகும்.

 
                     158
மிக்கதுந் தன்னோ டொப்பது மில்லா
     மேன்மையே யிறைமையி னியல்பா
யொக்கது படைத்த காரண மின்றி
     யொருங்குதா னாதலு நிலையே
தக்கதுந் தன்னா லன்றிமற் றொருவன்
     றடக்கையால் வரின்வழு வென்னத்
தொக்கது நீக்கித் தன்வயத் தாதல்
     சொல்லிய வாறினுண் முதற்றே
 
''மிக்கதும் தன்னோடு ஒப்பதும் இல்லா மேன்மையே இறைமையின்
                                         இயல்பு ஆய்,
ஒக்க அது படைத்த காரணம் இன்றி ஒருங்கு தான் ஆதலும், நிலையே
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் தடக் கையால் வரின் வழு
                                         என்னத்
தொக்கு அது நீக்கி, தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே.