பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 273

     ''தனக்கு உயர்ந்ததும் தன்னோடு ஒப்பதும் இல்லாத மேன்மையே
தெய்வத் தன்மையின் இயல்பு ஆதலால், முழுமையாக அத்தெய்வத்
தன்மையைப் படைத்த வேறொரு மூலகாரணம் இன்றி முற்றிலும் தானாகவே
தான் ஆதலும், நிலையாய்த் தங்கியதும் தன்னால் அன்றி வேறொருவனின்
பெரிய கைவன்மையால் வரின் குற்றமாகும் என அந்தத் தொடர்பையும்
நீக்கி, இவ்வாறு தன் வயமாய்த் தான் உளனாதல் என்பது முன் சொல்லிய
ஆறு இலக்கணங்களுள் முதலாவது ஆகும்.

     'தன் வயத்து ஆதல்' என்ற முதல் இலக்கணம் விளக்கப்படுகிறது.
ஒக்கது - ஒக்க + அது : தொகுத்தல் விகாரம்.

 
              159
அன்னவாய் தன்னை யாக்கினோ னில்லா
     தாயின காலமு மில்லா
துன்னவா யாகி வந்தநா ளுளதேற்
     றோற்றுவித் தியற்றினோ னுளதா
மென்னவாய்ந் திணையாச் சிறப்புமெய் யிறையோ
     னின்றுள னன்றில னென்னா
மன்னவா யென்றுந் தானுள னாகி
     மாய்ந்தநா ளனைத்தையுங் கடந்தோன்.
 
''அன்ன வாய், தன்னை ஆக்கினோன் இல்லாது ஆயின காலமும்
                              இல்லாது
உன்ன வாய் ஆகி, வந்த நாள் உளதேல், 'தோற்றுவித்து இயற்றினேன்
                              உளது ஆம்,'
என்ன வாய்ந்து, 'இணையாச் சிறப்பு மெய் இறையோன் இன்று உளன்;
                              அன்று இலன்,
என்னா, மன்அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந் நாள்
                              அனைத்தையும் கடந்தோன்.

     அத்தகைய முறையில், மெய்க் கடவுளுக்குத் தன்னை ஆக்கினவன்
என்று ஒருவனும் இல்லாமல் தான் தோன்றின காலம் என்று ஒன்றும்
இல்லாத தன்மையாய்க் கருத இடம் உண்டாகும். அவ்வாறன்றி, அவன்
வந்து தோன்றிய நாள் என்று ஒன்று இருக்குமாயின், 'அவனைத்
தோற்றுவித்துப் படைத்தவன் ஒருவன் வேண்டும்' என்று சொல்ல ஏற்படும்.
அவ்வாறு, ஏற்பட்டு, 'ஒப்பில்லாத சிறப்பு வாய்ந்த உண்மைக் கடவுள்
இக்காலத்தில்