பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 274

உள்ளான்; அக் காலத்தில் இருந்திலன்' என்று சொல்ல இடமில்லாது,
நிலைபேறு பொருந்தி என்றுமே தான் உள்ளவனாகி, கடந்த காலம்
அனைத்தையும் கடந்து நிற்பவன் ஆவான்.

     இது 'முதல் இலன் ஆதல்' என்ற இரண்டாம் இலக்கணத்தை
விளக்கியவாறு, என்னா - 'என்னாமல்' என்ற எதிர்மறை வினையெச்சம்
ஈறு கெட்டு நின்றது. அவாய் - 'அவாவு' என்ற வினையின் இறந்த கால
எச்சம்.

 
                      160
எல்லையே யிடுமோர் காரண மிறைவற்
     கில்லதா வெல்லையு மில்லை
குல்லையே நின்றொவ் வோருறுப் பெல்லை
     கொண்டன வில்லதேல் வடிவு
மில்லையே யவ்வா றளவுள தன்றி
     யிடரிடு முருவுட லென்ன
வல்லையே மிக்கோ ரளவிலாற் கில்லை
     வழங்குமைம் பொறிக்குரி வடிவே.
 
எல்லையே, இடும் ஓர் காரணம் இறைவற்கு இல்லதால் எல்லையும
                                             இல்லை.
குல்லையே நின்று, ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல்,
                                             வடிவும்
இல்லையே. அவ்வாறு அளவு உளது அன்றி, இடர் இடும் உரு உடல்
                                             என்ன,
வல்லையே மிக்கு ஓர் அளவு இலாற்கு, இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு                                              உரி வடிவே.

     ''எல்லை வரையறுத்துக் கொடுக்கும் வேறு ஒரு மூலகாரணப் பொருள்
தனக்கு இல்லாமையால், இறைவனுக்கு வழங்கும் எல்லையும் இல்லை.
அளவோடு நின்று, ஒவ்வோர் உறுப்பும் எல்லை கொண்டு அமைதல்
இல்லையாயின், உருவ வடிவமும் இல்லை. அவ்வாறு, அளவு உள்ள
பொருளாக அன்றி, தன் வல்லமையும் மிக்கு ஓர் அளவுக்குள் அடங்காத
இறைவனுக்கு, துன்பத்தை இட்டு வைக்கும் உருவம் கொண்ட உடல் என்று
வழங்கும் ஐம்பொறிகளுக்கு உரிய வடிவமும் இல்லை.