|
'தரும்
பொறி உரு இலன் ஆதல்' என்ற மூன்றாம் இலக்கணம் இங்கு
விளக்கம் பெறுகிறது. ''ஆகையால், ஆண்டவன் கண்ணுக்கு உரிய சோதியும்
அல்ல, மூக்குக்கு உரிய வாசமும் அல்ல, வாய்க்கு உரிய சுவையும் அல்ல,
காதிற்கு உரிய சத்தமும் அல்ல, கைக்கு உரிய கண்டிப்பும் அல்ல'' என்பது
பழைய உரைக் குறிப்பு.
| 161 |
சீர்வளர்
ஞான நீதியன் பூக்கந்
திறன்றயை
யானந்த மற்றை
யேர்வளர் குன்றா நன்னருண்டாகி
யெலாமனைத்
தாகியொன் றாகி
நேர்வளர் பொலிவின் மிகைகுறை பன்மை
நீப்பன
நிறைப்பன வாகிப்
போர்வள ரிறைவற் குருவிதே யுரிய
பிணைவில
வியல்பிதே யன்றோ. |
| |
''சீர் வளர்
ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை
ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி, எலாம் அனைத்து ஆகி ஒன்று
ஆகி
நேர் வளர் பொலிவின் மிகை குறை பன்மை நீப்பன நிறைப்பன ஆகி,
பேர் வளர் இறைவற்கு உரு இதே. உரிய பிணைவு இல இயல்பு இதே
அன்றோ.
|
''நிறைந்த
செல்வமும் ஞானமும் நீதியும் அன்பும் ஊக்கமும்
வலிமையும் இரக்கமும் மகிழ்ச்சியும் மற்றும் அழகு வளர்கின்ற நன்மையெல்லாம் குறைவற
உடையதாகி, எல்லாக் குணங்களும் அனைத்தும்
ஆகி ஒன்றும் ஆகி, இவையெல்லாம் நேராக வளர்கின்ற பொலிவோடு
மிகுதி குறை பன்மை என்ற வேறுபாடு தவிர்ப்பனவும் நிறைப்பனவும் ஆகி,
இதுவே பெருமை வளர்கின்ற இறைவனுக்கு உருவம் ஆகும். இறைவனுக்கு
உரிய குணங்களின் இணைப்பு என்று இல்லாத இயல்பு இதுவே.
'மன்
வயத்து எல்லா நலம் உளன் ஆதல்' என்ற நான்காம் இலக்கண
விளக்கம் இது. 'அன்றோ' அசைநிலை, 'அவை எலாம் எல்லாம் ஆகி
ஒன்றும் ஆகி என்றமையால், ஞானமே நீதியாய்த் தயையாய்
மற்றவையாகவும், நீதியே ஞானமாய்த் தயையாய் மற்றவையாகவும்,
இத்தன்மைத்து மற்றக் குணங்களும் ஆகி, ஒவ்வொரு நன்மை எல்லா
நன்மை யாகையில் தம்முள் வேறுபடாமல் எல்லாம் ஒன்று ஆம்
ஆகையால்,
|