பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 281

     அவர்களே தொடர்ந்து, ''ஆற்று நீரை நீந்தித் தள்ளிக் கரை சேரத்
தேடாமல் அலையோடு மிதந்து செல்லுதல் போல், அக்கவிகளின்
மதியினால், தள்ளுண்டு பலர் வெள்ளம் போன போக்கில் இழிவு பொருந்த
நடந்து, வான் கதியைத் தள்ளிய தன்மையாய், கெடுவதற்குக் காரணமான
தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தோம். இப்பொழுதே, அந்தப் பொய்
மூட்டையைத் தள்ளிவிட்டு குணத்தில் தனக்கு ஒப்பாவார் இல்லாத மெய்க்
கடவுளை உணர்ந்தோம்'' என்றனர்.

 
                  169
இவற்றை நாளள விராவிரு ளிறாதுல குதித்த
வற்றை நாளுள வாரண மெங்கணும் பொழிந்த
கற்றை நாமுநம் முந்தையர் காண்கிலா தென்னோ
மற்றை நாதனீ ரிதோவென வசிட்டனொந் துரைத்தான்.
 
''இற்றை நாள் அளவு இரா இருள் இறாது, உலகு உதித்த
அற்றை நாள் உள ஆரணம் எங்கணும் பொழிந்த
கற்றை நாமும் நம் முந்தையர் காண்கிலாது என்னோ?
மற்றை நாதன் நீர் இதோ?'' என வசிட்டன் நொந்து உரைத்தான்.

     வசிட்டன் முன் நிலைமைக்கு இரங்கி நொந்து, ''இந்நாள் வரைக்கும்
எங்களுக்கு இரவு போன்ற அறியாமை இருள்விடியாமல், உலகம் தோன்றிய
அந்நாள் முதல் உள்ள மெய் வேதம் எங்கும் பொழிந்த கதிர்த்திரளை
நாங்களும் எங்கள் முன்னோரும் கண்டு கொள்ள இயலாது போனதற்கு
என்ன காரணமோ? மற்றும் இது ஆண்டவன் செய்யத்தக்க முறைமை
தானோ?'' என்று உரைத்தான்.

 
                           170
நனைவ ரும்பல நளினம்விள் ளாகதிர்க் குறையோ
புனைவ ருங்குண முழுதுளான் பொருவிலான் பொலிந்த
நினைவ ருந்திற நிமலனென் றறைதிரே யறைந்துஞ் சினைவ ரும்பலர்ச் சேர்த்தினீ ரெனவளன் சொன்னான்.
 

''நனை வரும் பல நளினம் விள்ளா கதிர்க் குறையோ?
'புனைவு அருங் குணம் முழுது உளான்; பொருவு இலான், பொலிந்த
நினைவு அருந் திற நிமலன்' என்று அறைதிரே; அறைந்தும்,
சினை வரும் பலர்ச் சேர்த்தினீர்'' என வளன் சொன்னான்.