அது
கேட்ட சூசை, ''அரும்பாய் நிற்கும் பல தாமரை மலர்கள்
விரியா திருப்பின், அது பகலவனின் குறை என்னலாமோ? பொலிந்த
சிந்தனைக்கும் எட்டாத அரிய திறங்கொண்ட குற்றமற்ற இறைவன்
வருணிக்க இயலாத அருங் குணங்களை முழுமையாகக் கொண்டவன்;
தனக்கு ஒப்பாக வேறு எதுவும் இல்லாதவன் 'என்றெல்லாம்' உங்கள்
நூல்கள் மூலமும் சொல்லிக் கொள்கிறீர்களே; அவ்வாறு சொல்லிக்
கொண்டும், அந்த இறைவனுக்குக் கிளைகள் போன்று வரும் பலரையும்
தெய்வங்களாகச் சேர்த்துக் கொண்டீர்கள். இது இறைவனின் தவறா?''
என்றான்.
முன்,
''காரிய நலத்து அவ்இலக்கணம் ஆறும் கடவுள் வாய் உள''
என்றது (164) இங்கு நினைவுகூரத்தக்கது.
171 |
வினைசெய்
பாவமுள் விளைத்தநள் ளிருட்புகை மொய்ப்பப்
புனைசெய் யாசையிற் பொறிதளர்ந் தறிவெலா மயங்கச்
சுனைசெய் பாசியிற் றொகுநிலை யிலமனந் தளம்ப
முனைசெய் பேயுறீஇ முழுவது மருட்டின தென்றான். |
|
"வினை செய்
பாவ உள் விளைத்த நள் அருட் புகை மொய்ப்ப,
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க,
சுனை செய் பாசியின் தொகு நிலை இல மனம் தளம்ப
முனை செய் பேய் உறீஇ முழுவதும் மருட்டினது" என்றான். |
அவனே
மீண்டும், ''தீவினை விளைவித்த பாவம் என்னும்,
உள்ளத்தில் விளைவித்த செறிந்த இருள் போன்ற புகை உலகெங்கும்
மண்டியது. அதனால், கைகாலில் மாட்டும் விலங்கு போன்ற ஆசையில்
அகப்பட்டு, ஐம்பொறிகளும் தளர்ந்து, அறிவெல்லாம் மயங்கியது. அவ்வாறு
குளத்திலுள்ள பாசி போல் கூடி நின்றும் நிலைத்தல் இல்லாது மனம்
அசைந்தாடியது. அவ்வேளையில் பகையைக் கொண்டுள்ள பேய் வந்து
சேர்ந்து முழுவதும் மயங்கச் செய்தது'' என்றான்.
172 |
வெறியிற்
சூழ்ந்தபல் விழைவதே கொடிதெனத் தாழ்ந்த
தறியிற் சூழ்ந்துழி தடமுண ரொடுங்கென நசைதாழ்
பொறியிற் சூழ்ந்துளம் பொங்கிய துயருறீஇக் கற்ற
நெறியிற் சூழ்ந்தநன் னிலையுறும் பாலரி தென்றான். |
|